Monday, July 29, 2019

மகளிர் ஸ்பெஷல் : வேலைக்கு செல்லும் பெண்களே கவனம் ....

 

 

 

 

 


பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் :

 


    உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் துக்கம் என்பது அவசியமான ஒன்று . புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள் . கடினமாக உழைப்பவர்கள்  10 மணி நேரமும் , மற்றவர்கள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்கினால் போதுமானதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உறக்கம் என்பது கடினமான ஒன்றாகி விட்டது .

     தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று .ஆனால் அவர்களுக்கு போதுமான அளவு உறங்க நேரமில்லாமலும்,சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதி படுகின்றனர் . தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    இரவு நேரப் பணியில் ஈடுபடுவதும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். பகலில் வேலைகளில் ஈடுபடுவதும்,இரவில் உறங்குவதுமே நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது . இதை மாற்றி இரவில் வேலைகளை செய்வதும் பகலில் உறங்குவதும் நம் மனம் ஏற்றுக்கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது . மேலும் நம்மை தூங்க வைக்கும் மெலட்டோனின்  என்கின்ற ஆர்மோன் இரவில் அதிகமாகும் பகலில் குறைவாகவும் சுரக்கும் .


சரியான துக்கம் கிடைக்காத பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:


👯காரணமில்லாமல் எரிச்சலடைவார்கள் .

👯கோபம் , மனசோர்வு , நாள்முழுவதும் மந்தமாக உணர்வார்கள் .

👯சிறிய பிரச்சனைகளை கூட பெரியதாக நினைத்து கவலை படுவது.

👯கண் எரிச்சல், தீராத ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

👯தூக்கமின்மை தொடர்ந்து நீடிக்குமானால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தையின்மைக்கு அடித்தளமாய் அமையும்.

👯மேலும் இது தொடர்ந்தால் சிறிது காலத்திலேயே ரத்த அழுத்தம் , இதய நோய் , பக்கவாதம் , நீரிழிவு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
    

தூக்கமின்மையை தவிர்க்க சில குறிப்புகள் :


👯பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும் .தூக்கம் குறையும் போது அவர்கள் உடல் ரீதியாகவும் , மனா ரீதியாகவும் பாதிக்கபடுகிறார்கள்.

👯இரவில் தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.

👯காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம் .இது சீரான தூக்கத்திற்கு அவசியம் .

👯இரவு நேர உடற்பயிற்சி தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் . இது முற்றிலும் தவறான பழக்கம்.

👯இரவில் ஆழ்ந்த உறக்கத்தை விரும்புபவர்கள் மதிய நேரதில் குட்டி தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம்.

👯படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதை தவிர்த்துவிட வேண்டும் .

👯மனக்கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும்.


பெண்கள் தூக்கமின்மையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே , பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.தூக்கமின்மையை  சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் , மருத்துவ ஆலோசனையை பெறுவதன் மூலம் இவற்றை தவிர்க்க முடியும்.