Saturday, September 14, 2019

யார் இந்த ஜாம்பவான் ??? உலகையே ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்தவர் ..

 

 

அப்துல்கலாம் பற்றிய சுவாரசிய தகவல்கள் ......




👮இந்திய ராணுவத்தில் உள்ள அக்னி பிருத்வி ஆகிய ஏவுகணைகள் அப்துல்கலாம் அவர்கள் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கபட்டது . இது  அவரது சாதனைகளில் ஒரு பெரிய மைல்கல்லாக திகழ்கிறது .


👮நம் நாட்டுக்காக , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியவர் இவர் . அப்போது அமெரிக்கா உள்பட பல நாடுகள்  யார் இந்த அப்துல்கலாம் ? என ஆச்சர்யத்துடனும் ,மிரட்சியுடனும் பார்த்தனர் .


👮போலியோ  நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை ஆப்துல்கலாம் அவர்கள் கண்டுபிடித்தவையாகும் .அந்த ஸ்டெண்ட்கு "காலம் ஸ்டெண்ட் "என்றே பெயர் வைத்தனர் 
 
👮 தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல்கலாம் படித்துள்ளார் . அதில் திருக்குறள் அவருக்கு மிகவும் பிடித்தவையாகும் .
அப்துல்கலாம் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் . அவர் எழுதிய "எனது பயணம்"என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

👮குடிப்பழக்கம், ஊழல் , வரதட்சணை உள்ளிட்ட 5 தீய பழக்கங்களை கைவிட நம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்ளவேண்டும்  என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல்கலாம் அறிவுறுத்தி அமல்படுத்தினார் .


👮இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள் , பொருட்கள் பயன்படுத்தப்பட்டன . அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க உள் நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை செய்யவைத்தார் .


👮நன்றியின் மறுபெயர் அப்துகலாம் என்றே கூறலாம் . அந்தளவுக்கு நன்றி மறக்காதவர் .தனது ஆசிரியர்கள் , நண்பர்கள் உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுபடுத்தி பேசுவார் .



👮அப்துகலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு . நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைச்சுவையை வெளிப்படுத்த தயங்குவதில்லை .


👮இளைஞர்கள் ஒழுக்கமாகவும் . நாட்டுப்பற்றுடனும் இருக்கவேண்டும் என்று கருதிய காலம் , " இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் .