Monday, June 10, 2019

அமாவாசை என்பது கெட்ட நாளா ??..இல்ல நல்ல நாளா ??

              தெரிந்துக்கொள்ளலாம் வாங்க ........😀😀😀


          பொதுவாக தன் இன்னுயிரை பிரிந்த ஆத்மாகள் அனைத்தும் நிலவின் ஒளியில் இருந்து தங்களுக்கு தேவையான உணவை பெறுகின்றன என்பது நம்பிக்கை . ஆனால் அம்மாவாசை அன்று நிலவின் ஒளி இல்லாததால் உணவுக்காக தங்களது ரத்த பந்தங்களான உறவுகளை தேடி அவர்கள் வருவதாக ஒரு நம்பிக்கை.அன்றயை தினத்தில் நாம் நம் முன்னோர்களுக்கு படையலிட்டு அவர்களின் பசியை போக்குவதன் மூலம் அவர்களின் பறிபூரண ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம் .

அறிவியலின்படி அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் சந்திக்கும் ஒரே புள்ளி சூரியன் ஆத்ம கிரகணம் என்றும் , சந்திரனை மனனோ கிரகணம் என்றும் அதே போல் சூரியன் பிதுரகன கிரகணம் , என்றும், மதுரான கிரகணம் என்றும் ,என்றும் கூறுவார்கள் . எனவே அமாவாசை நாட்களில் பொதுவாக யாரையும் துன்புறுத்தக்கூடாது .

 

1.)அமாவாசை அன்று தெருக்கோலம் போடலாமா ?

  

                   அமாவாசை அன்று தெருக்கோலம் போடக்கூடாது .அமாவாசை மற்றும் சிராத்த (தர்ப்பணம் ) தினங்களில் நம் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் வீடுகளுக்கு வரும் ஆன்மாக்கள் வாசலில் கோலம் இருப்பின் உள்ளே வர இயலாது .

 

                  பெரியோர்களின் ஆன்மாக்கள் பித்ரு பூஜை நாட்களில் வீடுகளுக்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பது நல்லது .

 

2.)தொட்டில் கட்ட சிறந்த நாள் எது ?  


                   தொட்டில் கட்டுவதற்கு முன் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் .குழந்தை பிறந்த 11 அல்லது 16 நாளில் தொட்டில் கட்டலாம் . அமாவாசை , கரிநாள் , தனியநாள் , அஷ்டமி மற்றும் நவமி நாளில் தொட்டில் கட்டுவதை தவிர்ப்பது நல்லது .


3.) அமாவாசை நாளில் புதிய வாகனங்களை வாங்கலாமா?

 

                    அமாவாசை அன்று புத்திய வாகனங்களை வாங்கக்கூடாது .புதிய வாகனங்கள் வாங்கினால் மேற்கொண்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்காது .


4.) சுப நிகழிச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாம் ?

 

                     சுப நிகழ்ச்சிகளுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல . அமாவாசை பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்கள் வழிபாட்டிற்கு சிறந்தது . அமாவாசையில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம் . வேள்விகள் , தான தர்மங்கள் செய்யலாம் .

 

5.) அமாவாசை அன்று எந்த காரியம் செய்யலாம் ?

 

                   அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம் . அம்மாவாசை பித்ருகளை வழிபட உகந்த நாள்.

 

6.) அமாவாசை அன்று நகை வாங்கலாமா?

 

                 அமாவாசை விடுத்தது மற்ற சுப தேதிகளில் நகைகளை வாங்கலாம் .



7.)அமாவாசை தர்ப்பணம் யாருக்கு ?


                 அமாவாசை தர்ப்பணம் என்பது தந்தைக்கு மட்டுமே . தாய்க்கு ஈமக்கிரியை செய்தால் வருடாந்திர சிரார்த்தம் செய்யலாம் .மாதாந்திர தர்ப்பணம் செய்யக்கூடாது .

8.) அமாவாசையில் வீடு பால் காய்ச்சலாம்?

 

               அமாவாசையில் வீடு பால் காய்ச்சுவதை தவிர்க்கவும் . 

No comments:

Post a Comment