Saturday, September 14, 2019

யார் இந்த ஜாம்பவான் ??? உலகையே ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்தவர் ..

 

 

அப்துல்கலாம் பற்றிய சுவாரசிய தகவல்கள் ......




👮இந்திய ராணுவத்தில் உள்ள அக்னி பிருத்வி ஆகிய ஏவுகணைகள் அப்துல்கலாம் அவர்கள் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கபட்டது . இது  அவரது சாதனைகளில் ஒரு பெரிய மைல்கல்லாக திகழ்கிறது .


👮நம் நாட்டுக்காக , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியவர் இவர் . அப்போது அமெரிக்கா உள்பட பல நாடுகள்  யார் இந்த அப்துல்கலாம் ? என ஆச்சர்யத்துடனும் ,மிரட்சியுடனும் பார்த்தனர் .


👮போலியோ  நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை ஆப்துல்கலாம் அவர்கள் கண்டுபிடித்தவையாகும் .அந்த ஸ்டெண்ட்கு "காலம் ஸ்டெண்ட் "என்றே பெயர் வைத்தனர் 
 
👮 தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல்கலாம் படித்துள்ளார் . அதில் திருக்குறள் அவருக்கு மிகவும் பிடித்தவையாகும் .
அப்துல்கலாம் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் . அவர் எழுதிய "எனது பயணம்"என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

👮குடிப்பழக்கம், ஊழல் , வரதட்சணை உள்ளிட்ட 5 தீய பழக்கங்களை கைவிட நம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்ளவேண்டும்  என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல்கலாம் அறிவுறுத்தி அமல்படுத்தினார் .


👮இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள் , பொருட்கள் பயன்படுத்தப்பட்டன . அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க உள் நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை செய்யவைத்தார் .


👮நன்றியின் மறுபெயர் அப்துகலாம் என்றே கூறலாம் . அந்தளவுக்கு நன்றி மறக்காதவர் .தனது ஆசிரியர்கள் , நண்பர்கள் உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுபடுத்தி பேசுவார் .



👮அப்துகலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு . நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைச்சுவையை வெளிப்படுத்த தயங்குவதில்லை .


👮இளைஞர்கள் ஒழுக்கமாகவும் . நாட்டுப்பற்றுடனும் இருக்கவேண்டும் என்று கருதிய காலம் , " இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் .  

Monday, July 29, 2019

மகளிர் ஸ்பெஷல் : வேலைக்கு செல்லும் பெண்களே கவனம் ....

 

 

 

 

 


பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் :

 


    உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் துக்கம் என்பது அவசியமான ஒன்று . புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள் . கடினமாக உழைப்பவர்கள்  10 மணி நேரமும் , மற்றவர்கள் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்கினால் போதுமானதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உறக்கம் என்பது கடினமான ஒன்றாகி விட்டது .

     தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று .ஆனால் அவர்களுக்கு போதுமான அளவு உறங்க நேரமில்லாமலும்,சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதி படுகின்றனர் . தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    இரவு நேரப் பணியில் ஈடுபடுவதும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். பகலில் வேலைகளில் ஈடுபடுவதும்,இரவில் உறங்குவதுமே நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது . இதை மாற்றி இரவில் வேலைகளை செய்வதும் பகலில் உறங்குவதும் நம் மனம் ஏற்றுக்கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது . மேலும் நம்மை தூங்க வைக்கும் மெலட்டோனின்  என்கின்ற ஆர்மோன் இரவில் அதிகமாகும் பகலில் குறைவாகவும் சுரக்கும் .


சரியான துக்கம் கிடைக்காத பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:


👯காரணமில்லாமல் எரிச்சலடைவார்கள் .

👯கோபம் , மனசோர்வு , நாள்முழுவதும் மந்தமாக உணர்வார்கள் .

👯சிறிய பிரச்சனைகளை கூட பெரியதாக நினைத்து கவலை படுவது.

👯கண் எரிச்சல், தீராத ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

👯தூக்கமின்மை தொடர்ந்து நீடிக்குமானால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தையின்மைக்கு அடித்தளமாய் அமையும்.

👯மேலும் இது தொடர்ந்தால் சிறிது காலத்திலேயே ரத்த அழுத்தம் , இதய நோய் , பக்கவாதம் , நீரிழிவு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
    

தூக்கமின்மையை தவிர்க்க சில குறிப்புகள் :


👯பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும் .தூக்கம் குறையும் போது அவர்கள் உடல் ரீதியாகவும் , மனா ரீதியாகவும் பாதிக்கபடுகிறார்கள்.

👯இரவில் தூங்க செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.

👯காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம் .இது சீரான தூக்கத்திற்கு அவசியம் .

👯இரவு நேர உடற்பயிற்சி தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் . இது முற்றிலும் தவறான பழக்கம்.

👯இரவில் ஆழ்ந்த உறக்கத்தை விரும்புபவர்கள் மதிய நேரதில் குட்டி தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம்.

👯படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதை தவிர்த்துவிட வேண்டும் .

👯மனக்கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும்.


பெண்கள் தூக்கமின்மையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே , பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.தூக்கமின்மையை  சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் , மருத்துவ ஆலோசனையை பெறுவதன் மூலம் இவற்றை தவிர்க்க முடியும்.



      

Monday, June 10, 2019

அமாவாசை என்பது கெட்ட நாளா ??..இல்ல நல்ல நாளா ??

              தெரிந்துக்கொள்ளலாம் வாங்க ........😀😀😀


          பொதுவாக தன் இன்னுயிரை பிரிந்த ஆத்மாகள் அனைத்தும் நிலவின் ஒளியில் இருந்து தங்களுக்கு தேவையான உணவை பெறுகின்றன என்பது நம்பிக்கை . ஆனால் அம்மாவாசை அன்று நிலவின் ஒளி இல்லாததால் உணவுக்காக தங்களது ரத்த பந்தங்களான உறவுகளை தேடி அவர்கள் வருவதாக ஒரு நம்பிக்கை.அன்றயை தினத்தில் நாம் நம் முன்னோர்களுக்கு படையலிட்டு அவர்களின் பசியை போக்குவதன் மூலம் அவர்களின் பறிபூரண ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம் .

அறிவியலின்படி அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் சந்திக்கும் ஒரே புள்ளி சூரியன் ஆத்ம கிரகணம் என்றும் , சந்திரனை மனனோ கிரகணம் என்றும் அதே போல் சூரியன் பிதுரகன கிரகணம் , என்றும், மதுரான கிரகணம் என்றும் ,என்றும் கூறுவார்கள் . எனவே அமாவாசை நாட்களில் பொதுவாக யாரையும் துன்புறுத்தக்கூடாது .

 

1.)அமாவாசை அன்று தெருக்கோலம் போடலாமா ?

  

                   அமாவாசை அன்று தெருக்கோலம் போடக்கூடாது .அமாவாசை மற்றும் சிராத்த (தர்ப்பணம் ) தினங்களில் நம் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் வீடுகளுக்கு வரும் ஆன்மாக்கள் வாசலில் கோலம் இருப்பின் உள்ளே வர இயலாது .

 

                  பெரியோர்களின் ஆன்மாக்கள் பித்ரு பூஜை நாட்களில் வீடுகளுக்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பது நல்லது .

 

2.)தொட்டில் கட்ட சிறந்த நாள் எது ?  


                   தொட்டில் கட்டுவதற்கு முன் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் .குழந்தை பிறந்த 11 அல்லது 16 நாளில் தொட்டில் கட்டலாம் . அமாவாசை , கரிநாள் , தனியநாள் , அஷ்டமி மற்றும் நவமி நாளில் தொட்டில் கட்டுவதை தவிர்ப்பது நல்லது .


3.) அமாவாசை நாளில் புதிய வாகனங்களை வாங்கலாமா?

 

                    அமாவாசை அன்று புத்திய வாகனங்களை வாங்கக்கூடாது .புதிய வாகனங்கள் வாங்கினால் மேற்கொண்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்காது .


4.) சுப நிகழிச்சிகளை அமாவாசை அன்று துவங்கலாம் ?

 

                     சுப நிகழ்ச்சிகளுக்கு அமாவாசை ஏற்ற நாள் அல்ல . அமாவாசை பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்கள் வழிபாட்டிற்கு சிறந்தது . அமாவாசையில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம் . வேள்விகள் , தான தர்மங்கள் செய்யலாம் .

 

5.) அமாவாசை அன்று எந்த காரியம் செய்யலாம் ?

 

                   அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்யலாம் . அம்மாவாசை பித்ருகளை வழிபட உகந்த நாள்.

 

6.) அமாவாசை அன்று நகை வாங்கலாமா?

 

                 அமாவாசை விடுத்தது மற்ற சுப தேதிகளில் நகைகளை வாங்கலாம் .



7.)அமாவாசை தர்ப்பணம் யாருக்கு ?


                 அமாவாசை தர்ப்பணம் என்பது தந்தைக்கு மட்டுமே . தாய்க்கு ஈமக்கிரியை செய்தால் வருடாந்திர சிரார்த்தம் செய்யலாம் .மாதாந்திர தர்ப்பணம் செய்யக்கூடாது .

8.) அமாவாசையில் வீடு பால் காய்ச்சலாம்?

 

               அமாவாசையில் வீடு பால் காய்ச்சுவதை தவிர்க்கவும் . 

Friday, April 26, 2019

கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் !!!!

கோடை வெப்பத்தை தவிர்க்க வேண்டுமா?

 

 👉தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு தான் முதலிடம் . தண்ணீர் குடிப்பதன் மூலம்  உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

 

 👉கோடைக்கலத்தையும், கோடைகால நோய்களைத் தவிர்க்கவும் , தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை  சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர் , ஜூஸ், மோர் , எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்கவேண்டும்.

 

 👉கோடையை சமாளிக்கவே இயற்கை நமக்கு அளித்த வரம் வெள்ளரி பிஞ்சு , தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது .இதில் 93 சதவிகிதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனை தரும்.

 

 👉கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க , அதிக அளவில் வியர்வை வெளியேறும் . அதனால், தண்ணீர் அருந்தவேண்டும்.

 

 👉மேலும் அதிக அளவு டீ , காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும் .

 

அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள்:

 👉கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள் 

 

 👉உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்டகொள்வதன் மூலம் தோல் ரத்த நாளங்கள் சுருக்கம் ஏற்பட்டு வெப்பம் இழப்பை ஏற்படுத்தும். எனவே மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது .

 

குறைவான தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள் :

 

 👉அவரவர் வேலை மற்றும் அவரவரின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும்.உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

 👉உடலில் நீர்சத்து குறையும்பட்சத்தில் மாலையில் களைப்பு , உடல்வலி,நாள்பட்ட சிறுநீர்ப் பாதை கல், மூலம் , வயதானவர்களுக்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் . உதடுகள் காய்ந்து போவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது , எப்போதும் துக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

 

பொதுவான டிப்ஸ் :

 

 👉வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட , குழந்தைகளுக்கு தான் எளிதில் அதிகம் தொற்றும் , அதிக உஷ்ணம் காரணமாக , அம்மை , வியர்க்குரு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க தினந்தோறும் இருமுறை குளிப்பது நலம். 

 

 👉வெளியில் செல்லும்போது , கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

Monday, April 22, 2019

கோடையில் சாப்பிடவேண்டிய பழத்தில் கட்டாயம் இதும் ஒன்று ....



    இந்த பழம்  தான் .....அடிக்குற வெயிலுக்கு செம மாஸ் காட்டுது ..😎😋



            தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது .வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் , பலரது உடலானது நெருப்பை போல வெப்பமாக காணப்படும்.காலநிலை தீடிரென மாறும்பொழுது , பலர் கோடைகாலத்தில் ஆரம்பத்திலேயே உடல்நலக்குறைவால் அவதிப்படுவார்கள் .


வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும் , பலங்களைம், பானங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.


கோடையில் தவறாமல் சாப்பிடவேண்டிய பழங்களில் இதும் ஒன்று  முலாம்பழம் .இதில் நீர்சத்து அதிகாகமாகவே நிறைந்துள்ளது.மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி , பொட்டாசியம் மற்றும் ஜிங்க் அதிகமாகவேய உள்ளது.

முலாம்பழம் கோடைகாலத்தில் மிக எளிதாக கிடைக்கக்கூடியது.இது அதிகப்படியான சத்துக்களை உள்ளடக்கியது .இது ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம்பழத்தில் 95% நீர்சத்துகள் வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சைடுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது .இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான குளிர்ச்சியும் தருகின்றன .

மருத்துவ பயன்கள் :


         🍘 இது உடலில் உள்ள வெப்பத்தை உடனடியாக போக்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் கொண்டவராகள் அதிகம் இந்த பலத்தை உட்கொள்ளலாம்

          🍘இந்த பலம் கிட்டினியில் உள்ள கல்லை கரைக்கக்கூடிய தன்மை கொண்டது.மேலும் முதுமைக் காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடியது .

         🍘இப்பழம் உடல் சோர்வை நீக்கக்கூடியது . உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது .

         🍘முலாம்பழத்தில் சிறுநீர் பிரிப்புத்தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோயிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

         🍘சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கு அல்சர் என்னும் வயிற்றுபுண் இருக்கும் . இவர்கள் இந்த பலத்தை தொடர்ந்து சில நாட்ட்கள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் பூரண குணமடையும் .

         🍘முலாம்பழத்தை ஜூஸ் செய்து குடிப்பதால் இதில் உள்ள பொட்டாசியம் இதய துடிப்பை இயல்பாக்கி, முலைக்கு தேவையான ஆக்ஸிஜினை அனுப்பி , முளைசோர்வை குறிக்கும்.

         🍘இந்த பலத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேன்படும்.

         🍘நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சர்க்கரை, குறைந்த கலோரி உணவு உண்பதால் எப்பொழுதும் சோர்வை உணர்வார்கள் . அவர்களுக்கு முலாம்பழ ஜூஸ் மிகவும் சிறந்தது.

மாம்பழம்-பயன்கள்


              இந்தியாவின் தேசிய பழமான மாம்பழம் தான் உலகிலே அதிக அளவில் மக்களால் உண்ணப்படுகிறது.இந்தியாவில் மாம்பழம் பற்றி அதிக அளவில் வேதங்களில் பேசப்பட்டுள்ளது அதில் மாம்பழம் கடவுளின் உணவாக கூறப்பட்டுள்ளது,MANGO என்ற சொல் மாங்காய் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து திரிந்து உருவானது என்று நம்பப்படுகிறது.நம் தமிழகத்தை பொறுத்தவரை மா,பலா,வாழை. ஆகியவை முக்கனிகளாக கருதப்படுகிறது.அப்படிப்பட்ட முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் மற்றும் அதன் பயங்களைப்பற்றி இங்கு காண்போம்.

வயிறு கோளாறுகள்:
         👉மாம்பிஞ்சின் தோலை நன்கு அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிறு கடுகடுப்பு,வயிற்றுப்போக்கு,சீதபேதி,மூல வியாதி ஆகியன குணமாகும்.வயிறு கோளாறு உள்ளவர்கள் ஜீரண கருவிகள் ஒழுங்காக இயங்க பிஞ்சு மாங்காய் துண்டுகளுடன் மிளகு தூளும் தேனும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.மாம்பிஞ்சு கிடைக்காத காலங்களில் உபயோகிக்க சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்துகாயவைத்து உபயோகிக்கலாம்.

குழந்தை பேறு:
             👉பழுக்காத மங்கை சாரும் ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி இலை சாரும் சேர்ந்து கர்ப்பமுற்ற பெண்கள் நாள்தோறும் உண்டு வந்தால் குழந்தை பெரு எளிதாவதுடன் குழந்தையின் உடல் வளர்ச்சியும் எளிதில் நோய்கள் தாக்காத உடல் தகுதியும் பெற வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய்:
           👉மாம்பலத்தில் உள்ள இனிப்பு சத்தால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடக்கூடாது என்று நம்பப்பட்டது.ஆனால் இன்று சில ஆய்வுகளின் படி மாம்பழமும் அதன் இலைகளும் சர்க்கரை நோய் ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாபக சக்தி:
        👉மாம்பழ சாற்றுடன் தேனும்,பாலும் கலந்து சாப்பிட்டால் அது ஒரு டானிக் ஆவதுடன் மூளை திறனை அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.மற்றும் இதில் மூளைக்கு தேவையான வைட்டமின் பி 6 உள்ளது.

என்றும் இளமை:         
           👉மாம்பலத்தில் முதுமையை தள்ளி வைக்கும் வைட்டமின் ஏ மற்றும்  வைட்டமின் சி அதிகமாக உள்ளது.  அதுமட்டும் இன்றி மாம்பழ சாறை முகத்தில் 10 நிமிடங்கள் சிறிது நாட்கள் தடவி வந்தால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும்.

TB நோய்:
           👉TB நோய் உள்ளவர்கள் ஆட்டுப்பாலுடன் நன்கு பழுத்த  மாம்பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் .மல்கோவா,க்ராப்,பங்கனப்பள்ளி.போன்ற வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். மேலே உள்ள ஏதேனும் ஒரு ரகத்தை 2 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி,மலச்சிக்கல்,இளைப்பு,இதய நோய்கள் மற்றும் TB ஆகியவை குணமாகும். 

சமையலறை ரகசியங்கள் ....



சமையல் செய்வதில் சிறு சிறு பொருட்களை கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலமாக  உணவின் சுவை மென்மேலும் அதிகரிக்கும். அவ்வாறு சமையலில் என்ன பொருட்களை எப்படி சேர்க்கலாம் , எப்படி சேர்த்தால் என்ன சுவை வரும் என்பதையும் நாம் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு சிலக்குறிப்புகளையும் ,வீட்டு குறிப்புகளையும் இங்கு நாம் காணலாம்.


   🍚தக்காளி, எலுமிச்சை , புளிசாதம் கிளரும்பொழுது சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறியபின் செய்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

   🍚தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி ஈர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுவென இருக்கும்.



   🍚பூரி மாவில் தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

   🍚உப்பு , மஞ்சள் தூள் , எலுமிச்சைசாறு வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது .

   🍚வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்த்து செய்தால் சுவையாகவும் இருக்கும்.

   🍚வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது , கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காது. ஒரு தக்காளியை துண்டுகளாக சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் பொரியல் அருமையாக இருக்கும்.

   🍚 வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டைம் ஒன்றாக ஓரே கூடையில் வைத்தால் இரண்டும் அழுகிவிடும் .எனவே தனித்தனியே வைத்தால் அழுகாமல் இருக்கும்.



    🍚வெங்காயத்தை உரிக்கும் பொழுது கண்களில் இருந்து நீர் வரும். அதை தவிர்க்க வெங்காயம் அரிவதற்கு முன் வெங்காயத்தை நீரில் கழுவி சிறிது நேரம் நீரில் வைத்து எடுத்து அறிவதன் மூலம் கண்களில் இருந்து நீர் வருவதை தடுக்கலாம்.

    🍚வெங்காயத்தாள் நீண்ட நாள் அழுகாமல் இருக்க அதை சிறிது சிறிதாக வெட்டி கண்ணாடி பாட்டிலில் போடு வைப்பதன் மூலம் கெடாமல் இருக்கும்.

    🍚முருங்கை கீரை பொரியல் செய்யும் பொழுது அதில் சிறிதளவு சர்க்கரையை தூவி விட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் .

    🍚ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அந்த நீரால் வீட்டை சுத்தம் செய்தால்  எறும்பு , ஈ  ஏதும் வீட்டை அண்டாது.
                                     


   🍚கருவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி  வைத்தால் காயாமல் இருக்கும்.

   🍚உப்புமா தாளித்தவுடன் , தண்ணீர் விட்டு உப்பு சேர்த்தவுடன்  ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயும் ஒரு டீஸ்பூன் நெய்யும் சேர்த்தால் , உப்புமா சுவையாகவும் , உதிரியாகவும் இருக்கும்.

   🍚கத்திரிக்காயை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தயிர் சேர்த்து வேகவைத்தால்  கத்திரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.

   
     🍚புதினா சட்னிக்கு பிடி வேர்க்கடலையும் சேர்த்துச் செய்தால் ருசி கூடும். சத்தும் நிறைந்தது. பருப்பு, பயறு வேகவைக்கும்போது குக்கரைப் பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும்.