Monday, April 22, 2019

மாம்பழம்-பயன்கள்


              இந்தியாவின் தேசிய பழமான மாம்பழம் தான் உலகிலே அதிக அளவில் மக்களால் உண்ணப்படுகிறது.இந்தியாவில் மாம்பழம் பற்றி அதிக அளவில் வேதங்களில் பேசப்பட்டுள்ளது அதில் மாம்பழம் கடவுளின் உணவாக கூறப்பட்டுள்ளது,MANGO என்ற சொல் மாங்காய் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து திரிந்து உருவானது என்று நம்பப்படுகிறது.நம் தமிழகத்தை பொறுத்தவரை மா,பலா,வாழை. ஆகியவை முக்கனிகளாக கருதப்படுகிறது.அப்படிப்பட்ட முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் மற்றும் அதன் பயங்களைப்பற்றி இங்கு காண்போம்.

வயிறு கோளாறுகள்:
         👉மாம்பிஞ்சின் தோலை நன்கு அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிறு கடுகடுப்பு,வயிற்றுப்போக்கு,சீதபேதி,மூல வியாதி ஆகியன குணமாகும்.வயிறு கோளாறு உள்ளவர்கள் ஜீரண கருவிகள் ஒழுங்காக இயங்க பிஞ்சு மாங்காய் துண்டுகளுடன் மிளகு தூளும் தேனும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.மாம்பிஞ்சு கிடைக்காத காலங்களில் உபயோகிக்க சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்துகாயவைத்து உபயோகிக்கலாம்.

குழந்தை பேறு:
             👉பழுக்காத மங்கை சாரும் ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி இலை சாரும் சேர்ந்து கர்ப்பமுற்ற பெண்கள் நாள்தோறும் உண்டு வந்தால் குழந்தை பெரு எளிதாவதுடன் குழந்தையின் உடல் வளர்ச்சியும் எளிதில் நோய்கள் தாக்காத உடல் தகுதியும் பெற வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய்:
           👉மாம்பலத்தில் உள்ள இனிப்பு சத்தால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடக்கூடாது என்று நம்பப்பட்டது.ஆனால் இன்று சில ஆய்வுகளின் படி மாம்பழமும் அதன் இலைகளும் சர்க்கரை நோய் ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாபக சக்தி:
        👉மாம்பழ சாற்றுடன் தேனும்,பாலும் கலந்து சாப்பிட்டால் அது ஒரு டானிக் ஆவதுடன் மூளை திறனை அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.மற்றும் இதில் மூளைக்கு தேவையான வைட்டமின் பி 6 உள்ளது.

என்றும் இளமை:         
           👉மாம்பலத்தில் முதுமையை தள்ளி வைக்கும் வைட்டமின் ஏ மற்றும்  வைட்டமின் சி அதிகமாக உள்ளது.  அதுமட்டும் இன்றி மாம்பழ சாறை முகத்தில் 10 நிமிடங்கள் சிறிது நாட்கள் தடவி வந்தால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும்.

TB நோய்:
           👉TB நோய் உள்ளவர்கள் ஆட்டுப்பாலுடன் நன்கு பழுத்த  மாம்பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் .மல்கோவா,க்ராப்,பங்கனப்பள்ளி.போன்ற வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். மேலே உள்ள ஏதேனும் ஒரு ரகத்தை 2 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி,மலச்சிக்கல்,இளைப்பு,இதய நோய்கள் மற்றும் TB ஆகியவை குணமாகும். 

No comments:

Post a Comment