Monday, April 22, 2019

சமையலறை ரகசியங்கள் ....



சமையல் செய்வதில் சிறு சிறு பொருட்களை கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலமாக  உணவின் சுவை மென்மேலும் அதிகரிக்கும். அவ்வாறு சமையலில் என்ன பொருட்களை எப்படி சேர்க்கலாம் , எப்படி சேர்த்தால் என்ன சுவை வரும் என்பதையும் நாம் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு சிலக்குறிப்புகளையும் ,வீட்டு குறிப்புகளையும் இங்கு நாம் காணலாம்.


   🍚தக்காளி, எலுமிச்சை , புளிசாதம் கிளரும்பொழுது சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறியபின் செய்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

   🍚தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி ஈர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுவென இருக்கும்.



   🍚பூரி மாவில் தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

   🍚உப்பு , மஞ்சள் தூள் , எலுமிச்சைசாறு வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது .

   🍚வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்த்து செய்தால் சுவையாகவும் இருக்கும்.

   🍚வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது , கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காது. ஒரு தக்காளியை துண்டுகளாக சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் பொரியல் அருமையாக இருக்கும்.

   🍚 வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டைம் ஒன்றாக ஓரே கூடையில் வைத்தால் இரண்டும் அழுகிவிடும் .எனவே தனித்தனியே வைத்தால் அழுகாமல் இருக்கும்.



    🍚வெங்காயத்தை உரிக்கும் பொழுது கண்களில் இருந்து நீர் வரும். அதை தவிர்க்க வெங்காயம் அரிவதற்கு முன் வெங்காயத்தை நீரில் கழுவி சிறிது நேரம் நீரில் வைத்து எடுத்து அறிவதன் மூலம் கண்களில் இருந்து நீர் வருவதை தடுக்கலாம்.

    🍚வெங்காயத்தாள் நீண்ட நாள் அழுகாமல் இருக்க அதை சிறிது சிறிதாக வெட்டி கண்ணாடி பாட்டிலில் போடு வைப்பதன் மூலம் கெடாமல் இருக்கும்.

    🍚முருங்கை கீரை பொரியல் செய்யும் பொழுது அதில் சிறிதளவு சர்க்கரையை தூவி விட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் .

    🍚ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அந்த நீரால் வீட்டை சுத்தம் செய்தால்  எறும்பு , ஈ  ஏதும் வீட்டை அண்டாது.
                                     


   🍚கருவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி  வைத்தால் காயாமல் இருக்கும்.

   🍚உப்புமா தாளித்தவுடன் , தண்ணீர் விட்டு உப்பு சேர்த்தவுடன்  ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயும் ஒரு டீஸ்பூன் நெய்யும் சேர்த்தால் , உப்புமா சுவையாகவும் , உதிரியாகவும் இருக்கும்.

   🍚கத்திரிக்காயை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தயிர் சேர்த்து வேகவைத்தால்  கத்திரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.

   
     🍚புதினா சட்னிக்கு பிடி வேர்க்கடலையும் சேர்த்துச் செய்தால் ருசி கூடும். சத்தும் நிறைந்தது. பருப்பு, பயறு வேகவைக்கும்போது குக்கரைப் பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும்.

No comments:

Post a Comment