Thursday, March 21, 2019

அதிசயமும் மர்மமும் கலந்த திகிலூட்டும் பாறை

மாமல்லபுரத்திலுள்ள  மறைந்துள்ள அதிசயம் 😲😲

          தொடர்புடைய படம்

😲             விடை  தெரியா  மர்மங்களாக   உள்ள  பலவற்றுள் 

ஒன்றுதான்  கிருஷ்ணரின்  வெண்ணைப்பந்து .... 

 

😲               தமிழ்நாட்டில்   காஞ்சிபுரம்   எனும்   மாவட்டத்தில்  உள்ளது 

 மாமல்லபுரம்   கடற்கரை .  அதன்   அருகே  தான்   உள்ளது 

 கிருஷ்ணரின்  வெண்ணை பந்து .  இதன்  மற்றோரு   பெயர்  

 வான்   இறைக்  கல் என்பது.

 

😲                இந்துக்களின்  முறைப்படி  கிருஷ்ணன்  தாய்  யசோதை 

வைத்திருந்த பெரிய  பானையில்  இருந்த  வெண்ணையை 

திருடி  உண்டதை  நினைவுகூறும்  வகையில்  இக்கல்  

அமைந்துள்ளது .

 

 சிறப்பு :

 

😲                 மர்மங்கள்  நிறைந்த  இந்த  கிருஷ்ணரின்  பந்தானது  சுமார்  

1200  ஆண்டுகளுக்கு  உருவாக்கப்பட்டது என  வரலாற்று  

ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.

 

 மர்மம் :

 

😲                 இந்த   பெரிய  உருண்டை  வடிவ  பாறாங்கல்   6 மீட்டர் 

 உயரமும்  5 மீட்டர் அகலமும் ,  250 டன்  எடையும்  கொண்டது .

 

😲                 இதன்  எடையை  ஒப்பிடும்போது  இது  மலையில் இருந்து 

 கிழே விழுந்திருக்க  வேண்டும் . ஆனால்  பிடிப்பு  ஏதுமில்லாமல்  45 

டிகிரி  சாய்வில்  புவி  ஈர்ப்பு  விசையை  எதிர்த்து   நிற்பது  தான் 

 இதன்  மர்மம் .

 

மக்களின்  நம்பிக்கை :

vennai panthu க்கான பட முடிவு

 

 

 😲              கண்ணனுக்கு  புலப்படாத  அமானுசியா  சக்தியே  இந்த

 பாறையை  சாய்வு  தளத்திலிருந்து  மேலே   நகராதப்படி  நிலை 

நிறுத்தியுள்ளது என்பது சிலரின் நம்பிக்கை .

 

😲               இன்னும்  சிலர்   இதில்  கடவுள்  தனது  சக்தியை 

புலப்படுத்தியள்ளார்  என்பது  சிலரின்  நம்பிக்கை.

 

😲              இது  இயற்கை  உருவாக்கம்  என்பது  புவியில் 

 விஞ்ஞானிகளின் கருத்தாகும் .

No comments:

Post a Comment