Thursday, March 21, 2019

இது புதுசு ....இள நரைக்கு இதோ அற்புத தீர்வு ....


 

 

இயற்கைக்கு திரும்புங்க

இது புதுசு ...இள நரைக்கு இதோ அற்புத தீர்வு :

   இள நரையால் அவதிப் படுவோர்க்கெனவே உருவாக்கப்பட்ட குறிப்புகளில் இவைகள் மிக முக்கியமானவை .கீழே உள்ள குறிப்புகளில் ஓன்றை பயன்படுத்தி இளநரையை அடியோடு விரட்டி அடிக்கலாம் .

அதோடு தேவைல்லாத கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ ,எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை முறையை பயன்படுத்துவதன் மூலம் இளநரையை இளமையிலேயே தவிர்க்கலாம் .

  • குறிப்பு 1:

மருதாணி இலைகள் 50 கிராம் ,

வேப்பங்கொழுந்து 2 கிராம் ,

நெல்லிக்காய் கால் கிலோ

ஆகிய மூன்றையும் நல்லெண்ணையில் விட்டு மைய அரைத்து , அதனுடன் தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் கலந்து ஒருமாத காலம் வெயிலில் காய வைக்க வேண்டும் .இந்த ஒருமாத காலத்தில் இது தைலமாக மாறிவிடும் .பின்பு இதனை தலையில் தினமும் தேய்த்து வந்தாலே வெள்ளை முடிகள் அனைத்து நீங்கி கருப்பாக முடிகள் வளர ஆரம்பிக்கும் .

  • குறிப்பு 2:

  உருளைக்கிழங்கு தோலானது மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யக்கூடிய ஒன்றாகும் .எனவே 2கப் தண்ணீரில் 5 உருளைக்கிழங்கு தோல்களை போட்டு வேக வைக்கவேண்டும் .பின் அந்த நீரை ஆறவைத்து வடிகட்டி பின்பு வாரம் இரண்டு முறை தலைக்கு தேய்த்து சீயக்காய் சேர்த்து குளித்துவந்தால் இளநரை கருப்பாக மாறும் .

  • குறிப்பு 3:

இஞ்சியுடன் பசும் பால் சேர்த்து நன்கு அரைத்து அதை நரைமுடி உள்ள இடத்தில் வாரம் இரண்டு முறை தேய்த்து 10 நிமிடம் ஊறவைத்து சீயக்காய் தேய்த்து குளித்து வர மாற்றம் உண்டாகும் .

  • குறிப்பு 4:

  காசகசா ,அதிமதுரம் இரண்டையும் பால் சேர்த்து அரைத்து குளிப்பதுக்கும் முன் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் குளிக்க இளநரை மாறும் .

  • குறிப்பு 5:

மிளகை தூள் செய்து அதனுடன் தயிர் சேர்த்து கலந்து 15 நிமிடம் தலையில் தேய்த்து  ஊற வைத்து குளித்துவர முடி கருப்பாக மாறும் .

1 comment: