Friday, March 29, 2019

நேரத்திற்கு சாப்பிடுவது கட்டாயம்

தொடர்புடைய படம்
       
              நாளைய பொழுது நாளைதான் விடிவும்.ஆனால்,அது இன்றைய பொழுதை விழுங்கிவிட்டுதான் விடியும் .இன்றைய பொழுதின் ஒவ்வொரு நொடியும் விழுங்கப்படுகிறது .நேரம் போய் கொண்டுதான் இருக்கும்.அது நமக்காக நிற்பதில்லை .குறிப்பாக நமது நேரம் நமது ஆரோக்கியத்தை அழிக்காதபடி கழிக்கிறதா என்பதுதான் முக்கியம்.
 
               
             உண்பது உயிர் வாழ்வதற்காக .அந்த உணவு உயிர் காப்பதாக இருக்கவேண்டும் . உயிரை அழிப்பதற்கு காரணமாகிவிடக்கூடாது . அதுமட்டுமல்ல ,சாப்பிடுவது சத்தான உணவாக இருக்கவேண்டும் .சத்துணவாக இருந்தாலும் ,அதையும் சரியான நேரத்துக்கு உண்ணவேண்டும் . அதுமட்டுமல்ல அதையும் சரியான நேரத்துக்கு உண்ண வேண்டும் .இல்லாதுபோனால் அதுவே உடலுக்கு கேடு தருவதாகிவிடும் .

 
         நமது உணவை செரிமானம் செய்வதற்காக நம் இரைப்பையில் கேஸ்ட்ரிக் ஆசிட்  என்ற அமிலம் சுரக்கிறது ..இது காரத்தன்மை உடையது . அது உணவு பொருட்களை உடைத்து நொறுக்கி  கூழ்போல் மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது .அது அரிக்கும் தன்மையையும் கொண்டது .அதனால் தான் உணவானது விரைவில் செரிமானம் ஆகிறது .

     உணவு வேளை நெருங்கும் சமயத்தில் இந்த அமிலமானது தானாகவே சுரக்க ஆரம்பித்துவிடும் .இது ,இயற்கையின் அற்புதமான படைப்பு. ஆனால் அந்த நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் இந்த அமிலம் இரைப்பையின் உட்சுவர்களை அரிக்க ஆரமித்துவிடும் . இது நீடித்தால் அதுதான் "அல்சர்" .
 
         
             ஜிரணிப்பதற்கு தயாராகும் உணவை எதிர்பார்த்து இந்த அமிலத்தை இரைப்பையானது சுரக்கும் .ஆனால் ,அந்த நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் சுரக்கப்பட்ட அமிலம் உணவை ஜிரணிப்பதற்குப் பதிலாக ,இரைப்பையின் உள்பக்க சுவரை அரிக்க ஆரம்பிக்கும் .நேரம் கடந்துபோனால் சத்தான உணவுகூட செரிமானமாகாமல் விஷப்பொருளாக மாறிவிடும் .சரியான நேரத்துக்கு ,சரியான உணவைச் சாப்பிட்டு உடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை .எனவே எக்காரணத்தைக்கொண்டும் சாப்பிடுவதை தள்ளிப்போடாதீர்கள் .
வேலையும் முக்கியம்தான் ,ஆனால் அதைவிட வேலையை பார்க்க,நமது உடல் ஆரோக்கியமும் முக்கியம் அல்லவா ?????


              வயிற்றில் புண் வந்துவிட்டால் அது யார் எவர் என்று பார்ப்பதில்லை .வலி வந்துவிட்டால் ,எல்லோரும் ஐயோ அம்மா ,கடவுளே என்றுதான் கூப்பாடு போடுகிறார்கள் .

 எனவே ,முதலில் வேளா வேளைக்குச் சரியாக சாப்பிட்டு பழகுங்கள் .உணவும் ருசிக்கும்,வாழ்க்கையும் ருசிக்கும்.
 

No comments:

Post a Comment