நம்மில் பெரும்பான்மையோருக்கு இறைநம்பிக்கை இருக்கிறது. நாம் எந்த நேரமும் பக்திமானாக இல்லாவிட்டாலும் ,குறிப்பிட்ட நேரங்களான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கு ஏற்றுவதும், முக்கிய விழாக்காலங்களில், விரத நாட்களில் ஆலயங்களுக்கு சென்றுவருவது என்பது வழக்கமான ஒன்றாகும்.ஆலயங்களில் வேண்டுமானானால் கடைபிடிக்க வேண்டுமென ஒருசில விதிமுறைகள் உள்ளன .ஆனால் வீட்டில் அந்த விதிமுறைகள் ஏதுமில்லை .இருந்தாலும் வீட்டில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் விதிகள் உள்ளன
அதே போன்றுதான் பூஜை அறையில் ஒரு சில செயல்களையும் மறந்துகூட செய்துவிடக்கூடாது.அவ்வாறு என்னென்ன செயல்களை செய்யக்கூடாது என்பதை பற்றிக்காண்போம் .
- விளக்கு என்பது மங்கள சின்னம் .இதற்கு மஞ்சள்,குங்குமம் ,பூ இல்லாமல் விளக்கு ஏற்றக்கூடாது
- நம் வீட்டில் பூஜைக்கு தேங்காயை உடைத்தும் குடுமியை எடுத்துவிட்டுதான் வைக்க வேண்டும் . ஏனென்றால் கெட்டகாரியங்களுக்குத்தான் தேங்காய் குடுமியை எடுக்காமல் வைப்பார்கள் .
- தீப்பரத்தைனை தட்டை எப்பொழுதும் வலமிருந்து இடமாகத்தான் சுற்றவேண்டும்.
- பூஜைக்கு பிரசாதங்களை படைக்க வாழை இலையை தான் பயன்படுத்த வேண்டும் .அதற்கு பதிலாக கையேடுகளை பயன்படுத்தக்கூடாது .
- கோவிலுக்கு சென்றுவந்ததும் குளிக்கவோ ,கால்களை கழுவவோகூடாது .
- கோவிலுக்குள் வெறும் கைகளோடு செல்லக்கூடாது .கடவுளுக்கு பூ அல்லது பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும் .
- கோவிலுக்கு சென்றதும் நேராக வீட்டிற்குதான் செல்லவேண்டும்.வேறு எங்கும் செல்லக்கூடாது .
- கோவிலில் கடவுளுக்கு அணிவித்த மாலையை நாம் அணியக்கூடாது .அதே போல் ஒரு கடவுளுக்கு அணிவித்த மாலையை மற்றொரு கடவுளுக்கு அணிவிக்கக்கூடாது.
- கோவிலுக்குள் சென்றுவிட்டு வெளியே வரும்போது தர்மம் செய்யக்கூடாது. கோவிலுக்குள் செல்வதற்கு முன்னரே தர்மம் செய்துவிட்டுக்கூட செல்லலாம்.
- பெருமாள் கோவிலில் கடவுளை வழிபட்டு முடித்துவிட்டு கோவிலில் அமரக்கூடாது .
- நம் வீட்டில் உள்ள தெய்வங்களை வணங்கிவிட்டு பின்னரே கோவிலுக்கு செல்ல வேண்டும் .
- பூஜை அறையில் பூஜையை தொடங்கும் போது நெற்றில் குங்குமம் இல்லாமல் பூஜையை தொடங்கக்கூடாது .
பின்வரும் விதிமுறை பின்படுவதன் மூலம் கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பதற்கு ஐயமில்லை .
No comments:
Post a Comment