Wednesday, March 20, 2019

கையளவே உள்ள நெல்லிக்கனியில் இத்தனை அதிசயங்களா ?

                  nellikani க்கான பட முடிவு




           கையளவே   உள்ள   நெல்லிக்கனியில்   இத்தனை   அதிசயங்களா ?  என்று   ஆச்சரியப்படும்   அளவிற்கு   நெல்லிக்கனியில்   உள்ள  சத்துக்களும், பயன்களும்   ஏராளம் .


                   மூத்தோர்    சொல்லும்   முதிர்ந்த    நெல்லிக்காயும் 
                              முதலில்   கசக்கும்    பிறகு   இனிக்கும் 


என்று   மூத்தோர்   சொல்லுக்கு   ஒப்பிட்டு   பழமொழி   வடிவிலும்   இதன் பயன்கள்   பற்றி  சொல்லி   இருக்கின்றனர்   நம்   முன்னோர்கள் ..

சரி   நெல்லிக்கனி   உடலுக்கு   அப்படி   என்ன  பயன்களை தருகிறது ?

  •     இந்த   நெல்லிக்கனியில்   மட்டும்   எந்த   ஒரு   காய்கறி   பழங்களில் இல்லாத    அளவிற்கு   வைட்டமின் சி 600 மி .கி ,  கால்சியம் 50 மி .கி ,   இரும்புச்சத்து 1.2 மி .கி   அளவுகளில்   சத்துக்கள்   உள்ளன .


  •     உடலை   இளமையாகவும்   ,பளபளப்புடனும்   வைக்கிறது .

  •    ஜீரண   கோளாறுகளை   தடுக்கிறது.

  •    முடி உதிர்வூ,   இளநரை   ,வழுக்கை    போன்றவற்றிக்கு   தீர்வு    தருகிறது .

  •   கண்ணின்   அனைத்து   குறைபாடுகளையும்   குணப்படுத்துகிறது .

  •   இரத்தக்குழாய்களில்   உள்ள   அடைப்பை   கரைகிறது.                                             
  •    ஆஸ்துமா  ,மலசிக்கல்   ,நீரிழிவு    நோய்    போன்றவற்றை    குணப்படுத்தும் தன்மை   கொண்டது .
  •  உடலுக்கு    குளிர்ச்சி   தருகிறது .

  •  எடையை   குறைக்கவும்   உதவுகிறது .

  •  மூளை   வளர்ச்சிக்கு    நெல்லிக்கனி   மிகவும்   பயன்படுகிறது


என   இதன்   நன்மைகளை   அடுக்கிக்கொண்டே    போகலாம்  .

இத்தனை    சிறப்பு    வாய்ந்த    நெல்லிக்கனியை   அப்படியே    உண்பதற்கு மாறாக   தேனில்    ஊறவைத்து    உண்ணும்போது   இதன்   பயன்களும் இரட்டிப்பாகிறது.



No comments:

Post a Comment