பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்பது சாஸ்திரம் . அதாவது சாப்பிட்டுக்கொண்டே பேசக்கூடாது. இது முக்கியம்.
அதே போல் சாப்பிடும்போது இடையே தண்ணீர் அருந்தவும் கூடாது
காரணம் , தண்ணீரானது சாப்பிடும் உணவை செரிமானம் ஆகச் செய்யும் அமிலத்தை நீர்த்துப்போக செய்துவிடும் .அதனால் செரிமானம் தாமதப்படும் . உணவின் சாரம் உடலில் சேராமல் போய்விடும் . இது விஞ்ஞான ரிதியான மருத்துவ உண்மை .
குழந்தைகளுக்குக்கூட , உணவை அளவோடுதான் ஊட்டிவிட வேண்டும் .
பிறந்த குழந்தை அழுகிறது . தாயானவள் , குழந்தையை மார்பகத்தோடு அணைத்து பால் ஊட்டுகிறாள் . குழந்தை போதும் என்றநிலையில் மார்பகத்தில் இருந்து வாயை எடுத்துவிடுகிறது .
ஆனால் , குழந்தையின் முகத்தை மீண்டும் மார்பகத்தோடு அழுத்தி வைத்து பால் அருந்தவைப்பது தவறானது . மேலும் மேலும்
புகட்டினால் ,அது ஏற்கனவே அருந்திய பாலை வாந்தி
எடுத்துவிடும் .
குழந்தை வளரும்போது ,அதன் உடல் வளர்ச்சிக்கான உணவு பொருட்களை தானே சாப்பிட்டுக்கொள்ளும் . என்னவோ குழந்தையின் உடலை தாங்கள்தான் வளர்ப்பதாக பெற்றோர்கள் பாவித்துக்கொண்டு ,உணவு ஊட்டுவதையே குறிக்கோளாகச் செய்கின்றனர் .
குழந்தையின் வயிறு மிகவும் மென்மையானது .உணவு ஜீரணிக்க குழந்தையின் வயிற்றுக்கு இடம் அளிக்கவேண்டும் . இரைப்பை முழுக்க உணவு பண்டங்களை திணித்து விட்டால் அது எப்படி செரிமானமாகும்?
குழந்தை பசியெடுக்கும் போது தானே அழும் . உணவு கொடுத்தால் அழுகையை நிறுத்திவிடும் . போதும் என்று நினைத்தால் உணவை மறுத்துவிடும் .தொடர்ந்து ஊட்டினால் மீண்டும் அழ ஆரம்பித்துவிடும் .
இயற்கைதான் குழந்தையை அழ வைக்கிறது .
ஆனால் அது நம் தாய்மார்களுக்கு புரிவதில்லை .குழந்தையை வெளியே தூக்கி சென்று ,விளையாட்டு காட்டிக்கொண்டே உணவை
திணிக்கிறார்கள் .குழந்தைகளை பயமுறுத்தி ஊட்டும்போது நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் , வாந்தி ஏற்படுகிறது .
ஆனால் , தாய்க்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது . குழந்தையின் தலையில் தலையில் குட்டுக் குட்டியும் , முதுகில் அடித்தும் ,கன்னத்தை கிள்ளியும் ,காதை திருகியும் ,உணவை திணிக்கிறாள் .
இதுபோன்ற வன்செயல்கள் , அக்கறை நிமிர்த்தமானது எனலாம் . ஆனால் குழந்தையின் உடல் -மன ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் . எத்தனை தாய்மார்களுக்கு இந்த உண்மை தெரியும்.
உங்கள் குழந்தைகளுக்கு உணவு புகட்டுவதில் நீங்கள் சரியாக இருந்தால் ,அதைவிட சிறந்த வளர்ப்பு முறை ஏதுமில்லை . அப்போதுதான் ,தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஆரோக்கியமாக இருக்கும் .
எனவே, அளவான , இயல்பான ,இயற்கையான நல்ல உணவுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள் .
No comments:
Post a Comment