Friday, April 26, 2019

கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் !!!!

கோடை வெப்பத்தை தவிர்க்க வேண்டுமா?

 

 👉தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு தான் முதலிடம் . தண்ணீர் குடிப்பதன் மூலம்  உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

 

 👉கோடைக்கலத்தையும், கோடைகால நோய்களைத் தவிர்க்கவும் , தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை  சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர் , ஜூஸ், மோர் , எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்கவேண்டும்.

 

 👉கோடையை சமாளிக்கவே இயற்கை நமக்கு அளித்த வரம் வெள்ளரி பிஞ்சு , தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது .இதில் 93 சதவிகிதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனை தரும்.

 

 👉கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க , அதிக அளவில் வியர்வை வெளியேறும் . அதனால், தண்ணீர் அருந்தவேண்டும்.

 

 👉மேலும் அதிக அளவு டீ , காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும் .

 

அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள்:

 👉கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள் 

 

 👉உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்டகொள்வதன் மூலம் தோல் ரத்த நாளங்கள் சுருக்கம் ஏற்பட்டு வெப்பம் இழப்பை ஏற்படுத்தும். எனவே மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது .

 

குறைவான தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள் :

 

 👉அவரவர் வேலை மற்றும் அவரவரின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும்.உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

 👉உடலில் நீர்சத்து குறையும்பட்சத்தில் மாலையில் களைப்பு , உடல்வலி,நாள்பட்ட சிறுநீர்ப் பாதை கல், மூலம் , வயதானவர்களுக்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் . உதடுகள் காய்ந்து போவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது , எப்போதும் துக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

 

பொதுவான டிப்ஸ் :

 

 👉வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட , குழந்தைகளுக்கு தான் எளிதில் அதிகம் தொற்றும் , அதிக உஷ்ணம் காரணமாக , அம்மை , வியர்க்குரு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க தினந்தோறும் இருமுறை குளிப்பது நலம். 

 

 👉வெளியில் செல்லும்போது , கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

Monday, April 22, 2019

கோடையில் சாப்பிடவேண்டிய பழத்தில் கட்டாயம் இதும் ஒன்று ....



    இந்த பழம்  தான் .....அடிக்குற வெயிலுக்கு செம மாஸ் காட்டுது ..😎😋



            தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது .வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் , பலரது உடலானது நெருப்பை போல வெப்பமாக காணப்படும்.காலநிலை தீடிரென மாறும்பொழுது , பலர் கோடைகாலத்தில் ஆரம்பத்திலேயே உடல்நலக்குறைவால் அவதிப்படுவார்கள் .


வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும் , பலங்களைம், பானங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.


கோடையில் தவறாமல் சாப்பிடவேண்டிய பழங்களில் இதும் ஒன்று  முலாம்பழம் .இதில் நீர்சத்து அதிகாகமாகவே நிறைந்துள்ளது.மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி , பொட்டாசியம் மற்றும் ஜிங்க் அதிகமாகவேய உள்ளது.

முலாம்பழம் கோடைகாலத்தில் மிக எளிதாக கிடைக்கக்கூடியது.இது அதிகப்படியான சத்துக்களை உள்ளடக்கியது .இது ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம்பழத்தில் 95% நீர்சத்துகள் வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி - ஆக்சைடுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது .இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான குளிர்ச்சியும் தருகின்றன .

மருத்துவ பயன்கள் :


         🍘 இது உடலில் உள்ள வெப்பத்தை உடனடியாக போக்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் கொண்டவராகள் அதிகம் இந்த பலத்தை உட்கொள்ளலாம்

          🍘இந்த பலம் கிட்டினியில் உள்ள கல்லை கரைக்கக்கூடிய தன்மை கொண்டது.மேலும் முதுமைக் காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடியது .

         🍘இப்பழம் உடல் சோர்வை நீக்கக்கூடியது . உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது .

         🍘முலாம்பழத்தில் சிறுநீர் பிரிப்புத்தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோயிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

         🍘சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கு அல்சர் என்னும் வயிற்றுபுண் இருக்கும் . இவர்கள் இந்த பலத்தை தொடர்ந்து சில நாட்ட்கள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் பூரண குணமடையும் .

         🍘முலாம்பழத்தை ஜூஸ் செய்து குடிப்பதால் இதில் உள்ள பொட்டாசியம் இதய துடிப்பை இயல்பாக்கி, முலைக்கு தேவையான ஆக்ஸிஜினை அனுப்பி , முளைசோர்வை குறிக்கும்.

         🍘இந்த பலத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேன்படும்.

         🍘நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சர்க்கரை, குறைந்த கலோரி உணவு உண்பதால் எப்பொழுதும் சோர்வை உணர்வார்கள் . அவர்களுக்கு முலாம்பழ ஜூஸ் மிகவும் சிறந்தது.

மாம்பழம்-பயன்கள்


              இந்தியாவின் தேசிய பழமான மாம்பழம் தான் உலகிலே அதிக அளவில் மக்களால் உண்ணப்படுகிறது.இந்தியாவில் மாம்பழம் பற்றி அதிக அளவில் வேதங்களில் பேசப்பட்டுள்ளது அதில் மாம்பழம் கடவுளின் உணவாக கூறப்பட்டுள்ளது,MANGO என்ற சொல் மாங்காய் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து திரிந்து உருவானது என்று நம்பப்படுகிறது.நம் தமிழகத்தை பொறுத்தவரை மா,பலா,வாழை. ஆகியவை முக்கனிகளாக கருதப்படுகிறது.அப்படிப்பட்ட முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் மற்றும் அதன் பயங்களைப்பற்றி இங்கு காண்போம்.

வயிறு கோளாறுகள்:
         👉மாம்பிஞ்சின் தோலை நன்கு அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிறு கடுகடுப்பு,வயிற்றுப்போக்கு,சீதபேதி,மூல வியாதி ஆகியன குணமாகும்.வயிறு கோளாறு உள்ளவர்கள் ஜீரண கருவிகள் ஒழுங்காக இயங்க பிஞ்சு மாங்காய் துண்டுகளுடன் மிளகு தூளும் தேனும் சேர்த்து சாப்பிடுவது நல்லது.மாம்பிஞ்சு கிடைக்காத காலங்களில் உபயோகிக்க சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்துகாயவைத்து உபயோகிக்கலாம்.

குழந்தை பேறு:
             👉பழுக்காத மங்கை சாரும் ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி இலை சாரும் சேர்ந்து கர்ப்பமுற்ற பெண்கள் நாள்தோறும் உண்டு வந்தால் குழந்தை பெரு எளிதாவதுடன் குழந்தையின் உடல் வளர்ச்சியும் எளிதில் நோய்கள் தாக்காத உடல் தகுதியும் பெற வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய்:
           👉மாம்பலத்தில் உள்ள இனிப்பு சத்தால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடக்கூடாது என்று நம்பப்பட்டது.ஆனால் இன்று சில ஆய்வுகளின் படி மாம்பழமும் அதன் இலைகளும் சர்க்கரை நோய் ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாபக சக்தி:
        👉மாம்பழ சாற்றுடன் தேனும்,பாலும் கலந்து சாப்பிட்டால் அது ஒரு டானிக் ஆவதுடன் மூளை திறனை அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.மற்றும் இதில் மூளைக்கு தேவையான வைட்டமின் பி 6 உள்ளது.

என்றும் இளமை:         
           👉மாம்பலத்தில் முதுமையை தள்ளி வைக்கும் வைட்டமின் ஏ மற்றும்  வைட்டமின் சி அதிகமாக உள்ளது.  அதுமட்டும் இன்றி மாம்பழ சாறை முகத்தில் 10 நிமிடங்கள் சிறிது நாட்கள் தடவி வந்தால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும்.

TB நோய்:
           👉TB நோய் உள்ளவர்கள் ஆட்டுப்பாலுடன் நன்கு பழுத்த  மாம்பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் .மல்கோவா,க்ராப்,பங்கனப்பள்ளி.போன்ற வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். மேலே உள்ள ஏதேனும் ஒரு ரகத்தை 2 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி,மலச்சிக்கல்,இளைப்பு,இதய நோய்கள் மற்றும் TB ஆகியவை குணமாகும். 

சமையலறை ரகசியங்கள் ....



சமையல் செய்வதில் சிறு சிறு பொருட்களை கூட்டவோ குறைக்கவோ செய்வதன் மூலமாக  உணவின் சுவை மென்மேலும் அதிகரிக்கும். அவ்வாறு சமையலில் என்ன பொருட்களை எப்படி சேர்க்கலாம் , எப்படி சேர்த்தால் என்ன சுவை வரும் என்பதையும் நாம் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. அவ்வாறு சிலக்குறிப்புகளையும் ,வீட்டு குறிப்புகளையும் இங்கு நாம் காணலாம்.


   🍚தக்காளி, எலுமிச்சை , புளிசாதம் கிளரும்பொழுது சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளறியபின் செய்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

   🍚தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி ஈர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுவென இருக்கும்.



   🍚பூரி மாவில் தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.

   🍚உப்பு , மஞ்சள் தூள் , எலுமிச்சைசாறு வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது .

   🍚வடை எண்ணெய் உறியாமல் இருக்க வெந்த உருளைக்கிழங்கு மசியலை சேர்த்து செய்தால் சுவையாகவும் இருக்கும்.

   🍚வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது , கொழகொழப்புடன் இருப்பது சிலருக்கு பிடிக்காது. ஒரு தக்காளியை துண்டுகளாக சேர்த்து வதக்கினால் வெண்டைக்காய் பொரியல் அருமையாக இருக்கும்.

   🍚 வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இரண்டைம் ஒன்றாக ஓரே கூடையில் வைத்தால் இரண்டும் அழுகிவிடும் .எனவே தனித்தனியே வைத்தால் அழுகாமல் இருக்கும்.



    🍚வெங்காயத்தை உரிக்கும் பொழுது கண்களில் இருந்து நீர் வரும். அதை தவிர்க்க வெங்காயம் அரிவதற்கு முன் வெங்காயத்தை நீரில் கழுவி சிறிது நேரம் நீரில் வைத்து எடுத்து அறிவதன் மூலம் கண்களில் இருந்து நீர் வருவதை தடுக்கலாம்.

    🍚வெங்காயத்தாள் நீண்ட நாள் அழுகாமல் இருக்க அதை சிறிது சிறிதாக வெட்டி கண்ணாடி பாட்டிலில் போடு வைப்பதன் மூலம் கெடாமல் இருக்கும்.

    🍚முருங்கை கீரை பொரியல் செய்யும் பொழுது அதில் சிறிதளவு சர்க்கரையை தூவி விட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் .

    🍚ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அந்த நீரால் வீட்டை சுத்தம் செய்தால்  எறும்பு , ஈ  ஏதும் வீட்டை அண்டாது.
                                     


   🍚கருவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி  வைத்தால் காயாமல் இருக்கும்.

   🍚உப்புமா தாளித்தவுடன் , தண்ணீர் விட்டு உப்பு சேர்த்தவுடன்  ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயும் ஒரு டீஸ்பூன் நெய்யும் சேர்த்தால் , உப்புமா சுவையாகவும் , உதிரியாகவும் இருக்கும்.

   🍚கத்திரிக்காயை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தயிர் சேர்த்து வேகவைத்தால்  கத்திரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும்.

   
     🍚புதினா சட்னிக்கு பிடி வேர்க்கடலையும் சேர்த்துச் செய்தால் ருசி கூடும். சத்தும் நிறைந்தது. பருப்பு, பயறு வேகவைக்கும்போது குக்கரைப் பயன்படுத்தினால் வைட்டமின்கள் வீணாகாமல் அப்படியே நமக்குக் கிடைக்கும்.

Sunday, April 21, 2019

வாழைப்பழம்-மருத்துவ பயன்கள்

        நாம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை தவறாமல் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரு வகை அற்புதமான அருமருந்துதான் வாழைப்பழம்.
        முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் மா,பலா,வாழை.இவை மூன்றும் நமது உடலுக்கு எண்ணற்ற பயனளிக்கிறது.மற்றும் இந்த வாழைப்பழம்  பஞ்சாமிர்தத்தில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது அப்படிப்பட்ட வாழைப்பழத்தின் நன்மைகளைப்பற்றி இங்கு காண்போம்.   



         🍌நீரிழிவு உள்ளவருக்கு வேக வைத்த வாழைக்காயுடன் பாகற்காய் ரசம் சேர்த்து கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.
       
          🍌பாலில் நன்கு பழுத்த பழத்தை போட்டு வேக வைத்து குழைத்து கலக்கி சாப்பிட்டால் மூல வியாதி ,மூலத்தின் எரிச்சல் ஆகிய நோய்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.

          🍌உடலில் தோன்றும் ரத்த சிலந்தி போன்ற கட்டிகளுக்கு வாழைப்பழத்தை குழைத்துப் போட்டால் விரைவில் பழுத்து சீழ் வெளியேறி புண் ஆற உதவியாக இருக்கும்.
     
          🍌வாழை பலத்துடன் இளநீர் சேர்த்து குழைத்து சிறிது தேன் கலந்து பல வியாதிகளுக்கு உப்பில்லா பத்தியம் இருந்து உண்டால் நல்ல உணவாகவும் ,அம்மை , டைபாய்டு , காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக அமைகிறது .

          🍌 வாழைத்தண்டை பச்சையாக சாப்பிட்டால் நம் உணவில் சேர்ந்து வயிற்றுக்குள் சேர்கின்ற சிறு கல் , மண் போன்ற வேண்டாத பொருட்ட்களை அழித்துவிடுவதுடன் , முதிர்ப்பையில் சேரும் கற்களை கரைத்துவிடுகிறது .

          🍌கொனேரியா வியாதி உள்ளவர்களுக்கு நிவாரணம் தருகிறது .

         🍌சிறுகுழந்தைகளுக்கும் , கர்ப்பிணிகளுக்கும் சிறிதளவு இந்த நீருடன் சிறிது நெய்யும் சேர்த்து காலைநேரத்தில் பேதிக்கு  கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

         🍌பாம்பு கடிக்கும் இந்த வாழைத்தண்டு நீர் அருமருந்தாக உள்ளது .பாம்புக்கடியால் வாய்க்கிட்டி போய் வாய்திறக்க மாட்டத்தவர்களை வாழை படையை பொடித்து பரப்பி அதன் மீது படுக்கவைத்து சிறிது நேரத்தில் வாய்திறக்கக்கூடிய அளவில் உடலில் மாறுதலை பார்க்கலாம் .

        🍌வயிற்றுப்போக்கு , வயிற்றுக்கடுப்புகளுக்கும் ஒரு நல்ல நிவாரணியாகவும் செயல்படுகிறது .

        🍌 வாழை  பூவை சரியாக சமைத்து தொடர்ச்சியாக உண்டுவர நீரிழிவு , இருமல் மற்றும் நீண்டகால அஜீரணம் ஆகியவற்றிக்கு நல்ல பலன் தரும் .

        🍌வாழைப்பூவை வேகவைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வேதனைகளை குறைக்கும் .

      🍌அளவுக்குமேல் உடல்பருமன் உள்ளவர்கள் உடலின் அளவையும் எடையையும் குறைக்க சுத்தமான பசுப்பாலுடன் பழுத்த வாழைப்பழத்தை குழைத்து கலக்கி புதிய வாழைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சாறுடன் ஒரு தேக்கரண்டி அளவு நாளுக்கு இரண்டு மூன்று தடவை சாப்பிட்டால் , உடலில் வேண்டாத ஊளைச் சதையை குறைத்து முத்திரத்தில் கலந்து கொண்டு வராச் செய்யும் .இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும் .

வாழைப்பழத்தின் வகைகள் :

பேயன்
அடுக்கு
ரஸ்தாளி
பச்சை
மலை
செய்வாழை
பூவன்
கற்பூரம்
மொந்தன்
நேந்திர
நவரை
சிங்கன்
கருவாழை
வெள்ளை

கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா .... வேண்டாமா ????


கோடைகாலத்தில்  நாம் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் .இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.அந்த வகையில் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது .

ஓரு பொதுவான அறிவுரை என்னவென்றால கோடையில் முட்டைகளைத் தவிர்ப்பது. முட்டைகள் மிகவும் உஷ்ணமானவை மற்றும் நல்லதை விட அதிக தீமையை விளைவிக்கலாம் என்று நம்பப் படுகிறது. முட்டைகள் பல ஆரோக்கிய பலன்கள் கொண்டவை மற்றும் அவை புரோட்டின், வைட்டமின் ஏ, டி மற்றும் பிற ஊட்டச்சத்துகளுக்கு சிறந்த ஆதாரமானவை. என்வே, அவை உண்மையிலேயே கோடையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா ?அதை பற்றி இங்கு காண்போம்.

🥚 முட்டையில் கனிமசத்து , வைட்டமின் , கால்சியம் , இரும்புசத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.


🥚கோடைகாலத்தில் சத்துக்கள் நிறைந்த முட்டையை சாப்பிட்டால் , செரிமான பிரச்சனை ஏற்படும் என்ற பரவலான கருத்துக்கள் உள்ளன.ஆனால் அது சரியான கருத்து இல்லை என்று சமையல் வல்லுநர்கள் கூறுகின்றனர் .

🥚கோடைகாலத்தில்  முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தை குறைக்கலாம் .முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டசத்துக்கள் , கோடையில் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.


 🥚கோடையில் அளவுக்கும் அதிகமாக முட்டை உட்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

🥚முட்டை  கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உடல் சோர்வு மாற்றும் உடல் பலவீனம் ஆகியவற்றை தடுக்கிறது .ஏனெனில் முட்டைஉடலில்  உள்ள ஆற்றலை நீண்ட நேரம் தக்கவைத்து கொள்ளகிறது .

🥚முட்டையை குறைவான எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் .ஏனெனில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல .

🥚முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

🥚பொதுவாகவே, கோடை கடக்கும் வரை அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லதாகும் .

🥚முட்டை அதிகமாக சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பெரியவர்கள் வெயில்காலத்தில் முட்டை சாப்பிட்டால், அவர்கள் தங்களுடைய உடலை சமாளித்துக் கொள்ள முடியும். குழந்தைகள் சாப்பிடும்போது உடல் நலக்கோளாறுகள் உண்டாகும். அவற்றை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான், தாய்மார்கள் குழந்தைகளுக்கு வெயில்காலத்தில் முட்டை கொடுக்க தயங்குகிறார்கள்.


Wednesday, April 17, 2019

கோடையில் எத்தனை பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கு!!!!

             கோடை   வெயிலால்  ஏற்படும்  பாதிப்புகள் ....!

 

 

 

 👉 கோடைகாலம் வந்துவிட்டது வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம் .கோடை வெயிலால் நம் சருமம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கூந்தலும் பாதிக்கப்படும் .கோடையில் சருமத்தையும் , கூந்தலையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி பார்ப்போம் .


 

 👉அவகோடா , வாழைப்பழம் இரண்டையும் சம அளவு எடுத்து குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கூந்தல் பட்டு போல மிருதுவாக இருக்கும் . கூந்தலின் உறுதித்தன்மையும்  அதிகரிக்கும் .


 👉வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலையில் ஏற்படும் சிறுகட்டிகள் மறையும் .


 👉சிலருக்கு கண், மூக்கு , உதடு பகுதிகளைச்  சுற்றி கருவளையம் இருக்கும் .புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமம் பெறலாம்.



 👉தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புசத்து இருப்பதால் சருமத்திற்கு நீர்சத்து கிடைக்கவும் , நிறம் கருமையாவதையும் தேடும்.


 👉ஆண்கள் , கற்றாழை சாட்டுரைதான் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து முகத்தில் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை தரும்.


 👉தயிர் உடலுக்கு மட்டுமின்றி சருமாதிரிக்கும் நல்லது . தயிரை அப்படியே பயன்படுத்துவது பதிலாக , தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம்.


 👉ஆரஞ்சு பலத்தினை தோலை அரைத்து, அதனுடன் தயிர்  சேர்த்தும் பூசலாம் .


 👉சிறிய பஞ்சில் ஆலிவ் ஆயில் வைத்து கண்களை சுற்றி தேய்த்துவந்தால் கண்ணில் உள்ள கருவளையம் நீங்கும்.மேலும் கண்களுக்கு புத்துணர்வு அளிக்கும்.


 👉சந்தனத்தை உடலில் தேய்த்துக்கு கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம்.


 👉கோடை  காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான் . வெள்ளரி, தர்பூசணி,  இளநீர் , போன்றவற்றை அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது .குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் சருமம் மங்காமல் , செழுமை அடையும்.

 

 👉வெயிலில் அலைபவர்கள் , வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீர் குடிக்கவேண்டும் . இதனால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

இதையெல்லாம் எடுத்துக்கொண்டால் கோடையில்  உடல்வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும் .

 

Tuesday, April 16, 2019

இங்கு ஒரு மணி நேரம் இருந்தால் நிச்சயம் மரணம்......ஏன் ?....எப்படி?

                                     கராசே  ஏரி 

 

  • இயற்கை  நமக்கு   ஏராளமான  நன்மைகளை  செய்தாலும், மனிதர்களான  நாம்  இயற்கைக்கு  ஏதேனும்  தீங்கு விளைவிக்கக்கூடிய  ஒரு  காரியம்  செய்தால்  அது  இரண்டு   மடங்காக  தீங்கு   விளைவிக்கக்கூடியதாக   மாறிவிடும் .

 

  • ஆனால் ,  மனிதர்களால்  பாதிப்பு  ஏற்பட்டு  சுத்தமாக  உள்ள  ஏரி  விஷமாக  மாறிவருகிறது . அதாவது , தேவைல்லாத  பல  பொருட்களை  நீர் ஆதாரமாக  உள்ள  இடங்களில் கொட்டுவதால்  அந்த  இடம்  பாதிப்புக்குள்ளாகிறது.


 

  • அந்தவகையில்  சுத்தமான   ஏரியில்  கழிவுகளை கொட்டியதாலும் , மனிதன்  தன்   தேவைக்காக செய்த  செயல்களாலும்  கதிரியக்கம்  கொண்டதாக  மாறிய  ஒரு ஏரியை  பற்றி  தான் இன்று அறியப்போகிறோம் .


  • மத்திய  ரஷ்யாவின்  தெற்கு  யூரல்  மலையில் அமைந்துள்ளது.      

                                                                                                                        

  • 1951-ம் ஆண்டு  முதல்  சோவியத்  ஒன்றியதால்  அணுசக்தி கழிவுகளை   கொட்டும் இடமாக  இந்த  ஏரி  பயன்படுத்தப்பட்டது .


  • 1957-ல் கராசே  ஏரியின்  அருகில்  அமைந்திருந்த  அணுசக்தி ஆலையில்  வெடிவிபத்து  ஏற்பட்டது .


  • அந்த  வெடி  விபத்து  காரணமாக  ஏராளமான  கதிரியக்க  துகள்கள்  ஏரியில்  பரவியது.

 

  • இதனால்  இந்த  ஏறியில்  உள்ள  நீர் மிகவும்  கதிரியக்கம்   கொண்டதாக மாறியது .

 

  • மேலும்,  இதன்  அருகில்  ஒருமணி  நேரம்  நின்றாலே  உயிரை  பறிக்கும்  அளவிற்கு  விஷத்தன்மை  வாய்ந்ததாக  உள்ளது .

Friday, April 5, 2019

வீட்டில் எந்தெந்த தெய்வ படங்களை வைத்து வணங்கலாம் ?



   பொதுவாக   கடவுள்   வழிபாட்டில்   உருவ   வழிபாடு   மிகவும்  முக்கியமானதாகும் .  உருவ  வழிபாடே  மக்களின்   மனதை    கடவுளிடம்  ஒன்றுமாறு   செய்யக்கூடியது   .  உருவ   வழிபாட்டால்  மக்கள்  கடவுளை  நேரில்  கண்டு  பிராத்தனை   செய்வது  போல்  மனம்   மகிழ்கிறார்கள் .


    Related image


பூஜையறையில் வைக்கவேண்டிய படங்கள் :

 

🙏  பொதுவாக   வீட்டில்  அவரவர்   குலதெய்வத்தின்   படங்களை   வைத்து  வணங்கி  வரலாம் .  இது   மிகவும்   நன்மையை   தரும்  

Related image

🙏அவரவர்   இஷ்ட தெய்வத்தின்   படங்களை   வைத்து  வணங்கி  வரலாம் . குலதெய்வத்திற்கு   அடுத்தபடியாக  நமக்கு   அருள்பாலிக்கும்  தெய்வம்  இஷ்ட  தெய்வமாகும் .

    Image result for vinayagar

🙏எந்த  ஒரு   விநாயகர்  படத்தினையும்   வீட்டில்  வைத்து  வணங்கி  வரலாம் .இவரை  வழிபடுவதனால்  நம்  வாழ்வில்  அணைத்து  நலன்களையும் பெறலாம் .

 
Related image 

 

🙏குழந்தை  கடவுள்  படம்  எதுவாக  இருந்தாலும்  அதை  வைத்து   வரலாம் . அது  குழந்தை  பாக்கியத்தை  தரும் .

 

 

Related image

 

🙏அன்னப்பூரணியின்   படத்தை  வீட்டில்  வைத்து வழிபாடு  செய்வது  மிகவும்  சிறப்பானது  . இதன்  மூலம்  வறுமை  நீங்கும் .பசி   பட்டினி   தீரும் .  வேலையில்லாமல்   இருப்பவர்களுக்கு  வேலை கண்டிப்பாக  கிடைக்கும் .

 Related image

 

🙏அர்தநாரீஸ்வரரின்   படத்தை  வைத்து  வணங்கி  வரலாம் .நம் அனைவர்க்கும்   வணங்க  வேண்டிய கடவுள்  இவரே .சக்தியுடன்  இருக்கும்   சிவபெருமானின்  படத்தை   வணங்கி  வரலாம் .

 

 Related image

 

🙏குடும்பத்துடன் இருக்கும்  சிவபெருமானுடைய  படத்தை  வைத்து  வணங்கி  வரலாம்  .இதுவே   எல்ல வடிவங்களையும்  காட்டிலும் மிகவும்  சிறந்தது .

 Related image

 

🙏கலைமகளின்  படத்தை  வைத்து   வணங்கலாம் .இதனால்  சிறியவர்களுக்கு  மட்டுமல்லாது  பெரியவர்களுக்கும்  பேச்சுதிறமையும்,  எழுத்துத்திறமையும்   உண்டாகும் .

 

 Related image

 

🙏ராமர் , சீதை  ,  லட்சுமணன்  இவர்களுடன்  கூடிய  அனுமனின்  படத்தை  வைப்பது  சிறந்ததாகும் .   அனுமனின்  படத்தை   வைத்தால்  அதனுடன்   ராமனின்   படத்தையும் கட்டாயம்  வைத்து   வணங்க  வேண்டும் .


Related image

 

🙏லட்சுமி  நாராயணனின்  எந்த  அலங்காரத்தையும்  வைத்து வணங்கலாம் .

Related image

 

🙏ராஜ  அலங்கார  முருகனின்   படத்தை  வைத்து வணங்கலாம் . முன்னேற  துடிப்பவர்கள்  வணங்க  வேண்டிய கடவுள் இவரே .

Related image

 

🙏மணக்கோலத்தில் இருக்கும் முருகன் படத்தினை வைத்து வணங்கி வரலாம். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை ,அன்பு ,காதல் ,பாசம் உண்டாகும் .


அம்மாடியோ !!!! இவளோ பெரிய காடா ?போகமுடியுமா ? போகணும்னுதா ஆசை ....

               

 

 

 

          அற்புதங்களும் ,ஆச்சரியங்களும்

                       😱 நிறைந்த அமேசான் காடு 😱 


     Related image

                                    அமேசான் எனும் அற்புதம் .....!!!

                       வருடமெல்லாம்  கொட்டும் மழை .....!!!

             சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் தரை .....!!!

           கண்ணுக்கெட்டிய  தூரம்வரை மரங்களும் ,செடிகளும் 

                                                பின்னிப்பிணைந்த அடர்ந்த காடு.....!!!

         இதுவரை கண்டிராத எண்ணற்ற அபூர்வமான                   

                                                      பறவைகளும் ,விலங்குகளும் .....!!!

          இதுவரை வெளி உலகமே பார்த்திராத சில   

                                                               ஆயிரம் பழங்குடியினர்.....!!!

              இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமேசான்  

 காட்டை  உருவாக்கிய பெருமை அமேசான் நதிகே சேரும் ....!!!

 

 

                                  வாருங்கள்.........

               அமேசான் காட்டிற்கு போகலாம்......


🌄 அமேசான் காடு என்பது தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஒரு மழைக்காடு ஆகும் .


🌄இதன் பரப்பளவு 7 மில்லியன் சதுர கிலோமீட்டராக்ள் ஆகும் . இதில் காடு  மட்டும் 5.5 மில்லியன்  ச .கி .மீ ஆகும் .மேலும் இது 9 நாடுகளில் பரவி உள்ளது .


🌄அந்நாடுகள்: கொலம்பியா,பெரு,வெனிசுலா,ஈக்வெடார்,கயானா,பொலிவியா,சுரிநாம் , பிரெஞ்சு ,கயானா ,ஆகியனவாகும் .


🌄அமேசான் காடுகளில் ஜீவாதாரமாக விளங்கும் அமேசான் நதி உலகின் மிக பெரிய நதியாகும் .

 

🌄அமேசானில் கிடைக்கும் 3000 பழவகைகளில் 200 மட்டுமே நம் பயன்பாட்டிற்கு வருகிறது .ஆனால் ,இங்கே வாழும் மக்கள் சுமார் 2000 அரிய பழ வகைகளை உண்ணும் பெயர் பெற்றவர்கள் .

 Related image

🌄உலகின் மிகப்பெரிய பாம்பினமான அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் நதிக்கரையில் வெகுசாரதாரணமாக காணப்படுகினறன 

 

🌄இன்றும் அமேசான் காடுகளிலும் ,நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிக்க முடியாத  மர்மங்கள் நிறையவே உள்ளன .

 

🌄அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது .இது ஆற்றில் விழுபவர்களுக்கு தீயில் விழுவது போன்று உணர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர் .

 

🌄மனித இனம் காணாத பல அதிசயங்கள் இங்கு ஒளிந்து இருக்கின்றன 

 Related image

🌄அமேசான் காடுகளுக்குள் சென்றுவிட்டு எளிதில் மீண்டு வர முடியாது .இதற்கு காரணம் அங்கு வாழும் விலங்குகளும் ,இயற்கை அமைப்புகளும் ,தண்ணீரின் ஓட்டமும் , இருட்டான சூழ்நிலையும்தான் .

 

🌄ஆச்சர்யமும் ,அமானுஸ்யமும் சூழ்ந்த இந்த அமேசான் காட்டிற்கு சென்று   வருவதை கற்பனை செய்தலே ஜில்லிட்டுப் போகிறது  .........

.

அனைத்திற்கும் ஒரே மருந்தா ? இது எப்படி சாத்தியம் .......


  •  இன்றைய  தலைமுறைகள்  எதிர்கொள்ளும்  முக்கிய  பிரச்சனைகள் உடல் சோர்வு  ,கண் பார்வை குறைவு  ,ரத்த அழுத்தம்  ,சர்க்கரை  உடல் பருமன்   போன்றவையாகும்  .கடந்த  50  வருடகால வாழ்க்கைமுறை  மாற்றத்தின்  பலன்களை  இன்று  நம் அனுபவிக்கிறோம் .  இதற்கு  முக்கிய  காரணம்  வாழ்க்கைமுறையுடன்  கூடிய  உணவு பழக்கங்கள் .

     

  • அன்று  விவசாயம்  சார்ந்து  இயங்கிய  நாம்  இயல்பாகவே  நல்ல உணவு  பழக்கங்களை  கொண்டிருந்தோம்  .அது  மெல்ல  மெல்ல நகரமயமாதிற்கு  சென்று  காலை  9 முதல்  மாலை 6  வரையிலான வேலை /வாழ்க்கைமுறை , பொருளாதாரத்தை  மையப்படுத்திய வாழ்கை  என்று  மாறத்தொடங்கிய  நாள்   முதல்  அதற்கு ஏற்றாற்போல்  நமது  உணவுபழக்கமும்  மாறிவிட்டது .

     

    இன்றைய  வாழ்க்கை  சூழல்  இப்படிதான்  என்பது  நிதர்சனம் .ஆனால் நாம் நலமுடன்  வாழவேண்டும்   என்பதும்  அவசியம்

     

  •  உதாரணமாக  , காலை  பழைய  கஞ்சி  குடித்து   விட்டு  மண்ணில் வேலை  செய்த  மக்கள்    இன்று  முதுமையிலும்  நலமுடன் வாழ்கின்றனர் . ஆனால்  ,இன்று மேற்கித்திய  உணவு  முறை ஆதிக்கம்  மற்றும்  தினமும்  ஒரே  வகையான, பொங்கல்   உணவுகள் போன்றவை  நமது  ஆரோக்கியத்தை  கொஞ்சம்  ஆட்டிப்பார்க்கிறது என்றே  சொல்லலாம் .


Related image
  • இவை  அனைத்தையும்  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள  ஒரு எளிய  வழி  இருகிறது . அந்த  மந்திர சொல்தான்    "முருங்கை " .நமது  உணவில்  தினமும்  முருங்கை கீரை , காய்  ,பூ  எதாவது  ஒன்று  சேர்த்துக்கொள்ள வேண்டும் .

     

  • இதிலும்  சமைத்த  முருங்கைகாயை  கீரை  விட  மிக  நல்லது .அதையும் விட  முருங்கை  பூவில்  எடுக்கப்படும்  தேன்   நல்லது  .இது தற்போது  சந்தைகளிலும்  கிடைக்கிறது.

                         Image result for murungai poo theen

  • நமது  இயல்பான  வாழ்கை முறையிலும்  உணவுப்பழக்கம் எவ்வாறாக  இருந்தாலும்  தினமும்   ஒரு கரண்டி  இந்த  முருங்கை  பூ தேன்  எடுத்துக்கொண்டால்  ஆரோக்கிய  சீர்கேட்டிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் . காலையில்  எழுந்ததும்  வெறும் வயிற்றில்  எடுத்துகொள்வது  மிகவும்  நல்ல  பலனை  தரும் .

     

 இவ்வாறு  இந்த  மகத்துவம்  வாய்ந்த  முருங்கை பூ தேன்  உட்கொண்டால்  எவ்வித   நோய்  நொடியும்  இன்றி  நலமுடன்     வாழலாம்  என்பதில் ஐயமில்லை .

தலைவலி ,இருமலுக்கு முற்றிலும் நிவாரணம் .

தலைவலி  ,இருமல் :


நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நோய்களில் நமக்கு மிகவும்
அதிகம் வலிகளை தரக்கூடியவைகளில் ஒன்று தலைவலி இருமலும் ஆகும் .இதனை மிகச் சிறந்த இயற்கை வைத்தியத்தின் மூலமாக நாமே நாம் வீட்டிலே இருந்தபடியே  சரிசெய்துகொள்ளளாம். எப்படி என்பதையும் அவை செய்யக்கூடிய வழிமுறைகளையும் இங்கே காணலாம் .
 
                      Image result for thalivali
  • அ ) நாட்டு  வெங்காயம்  இரண்டு  மூன்று  மட்டும்   பச்சையாகவே   உரித்து சாப்பிட்டாலும் ,

  • ஆ ) கொண்டைக்கடலையை   லேசாக   வறுத்து   மென்று  சாப்பிட்ட  பின்  பால்  அருந்தி   வர  தலைவலி  , தலைபாரம் ,இருமல்   தீரும்

  • துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும் .
 
  • துளசி இலை ,வில்வ இலைச்சாறு வகைக்கு 100 மி லி எடுத்து ,அத்துடன் 200 மி லி  தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி ,சாறுசுண்டியபின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும் .
 
  • ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்து போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி ,இதனை இரவில் தூங்க போவதுற்கு முன்பு 3 நாட்கள் தொடர்ந்து குடித்துவர இருமல் ,தலைவலி உடனே  போய்விடும் .

  • மிளகாய் ஊசியால் குத்தி தீயில் அதன் புகையை மூக்கு மூலமாக உள் இழுத்தாலே ஜலதோஷம்,தலைவலி போய்விடும் .
 
  • முற்றிய வெண்டைக்காயை சூப்  செய்து குடித்தால் இருமல் குணமாகும்
 
  • நொச்சி இலையை தலையணைக்குள் பரப்பி வைத்து தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி ,சளி பிரச்சனையும் விலகிவிடும் .

  • திப்பிலி ஒரு பங்கு &துளசி இலை 3பங்கு என்ற அளவில் பொடிசெய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும் .

  • சூடான சுக்கு ,மல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும் .
 
  • நெஞ்சுச்சளி தீர தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவலாம் .  

  • இஞ்சிசாறு  50 கி ,நல்லெண்ணெய் 50கி சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ளவும் .இந்த தைலத்தை தேய்த்து 20 நிமிடம் ஊறியதும் பயத்தமாவு &அரப்புத்தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைவலி குணமாகும். 

  • முள்ளங்கி சாறு அல்லது மாதுளம் பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும் . 

  • வெந்தய கீரையை சமைத்து சாப்பிட இருமல் குணமாகும் 
 
  • சித்தரத்தை ,சுக்கு ,மிளகு ,சதகுப்பை ,திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடிசெய்து கால் லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து மூன்று பங்காக்கி ஒரு நாளைக்கு 3 வேளை அருந்தினால் நோய்கள் தீரும் .

Related image
  • துளசி ரசம் ,இஞ்சி ரசம் ,கலந்து பருகலாம் .
 
  • நத்தை சூரி இலை சாறை  15 மி .லி காலை மாலை சாப்பிடலாம் .

  • துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம் .

  • முசுமுசுக்கை இலையை சாறு எடுத்து தோசை மாவுடன் கலந்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டால் சளி சுரம் தீரும் .

  • ஆடாதோடை இலையை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும் .          

Tuesday, April 2, 2019

குழந்தைகளிடம் உங்கள் உணவு அக்கறையை திணிக்காதீர்கள் ..அது ஆபத்து

              



            பேசிக்கொண்டே  சாப்பிடக்கூடாது  என்பது  சாஸ்திரம் . அதாவது சாப்பிட்டுக்கொண்டே   பேசக்கூடாது. இது  முக்கியம்.

 அதே  போல்   சாப்பிடும்போது  இடையே  தண்ணீர்  அருந்தவும்  கூடாது 
காரணம் , தண்ணீரானது   சாப்பிடும்  உணவை  செரிமானம் ஆகச்  செய்யும் அமிலத்தை  நீர்த்துப்போக  செய்துவிடும்  .அதனால்  செரிமானம்  தாமதப்படும்  . உணவின்  சாரம்  உடலில்  சேராமல்  போய்விடும் . இது  விஞ்ஞான  ரிதியான  மருத்துவ  உண்மை  .             
kulanthaikal unavu க்கான பட முடிவு
 குழந்தைகளுக்குக்கூட , உணவை  அளவோடுதான்  ஊட்டிவிட  வேண்டும் .
பிறந்த  குழந்தை  அழுகிறது .  தாயானவள் ,  குழந்தையை  மார்பகத்தோடு  அணைத்து   பால்  ஊட்டுகிறாள் . குழந்தை  போதும்  என்றநிலையில்  மார்பகத்தில்  இருந்து  வாயை  எடுத்துவிடுகிறது  .

ஆனால் , குழந்தையின்  முகத்தை மீண்டும்  மார்பகத்தோடு  அழுத்தி   வைத்து   பால்  அருந்தவைப்பது  தவறானது . மேலும்  மேலும் 
புகட்டினால் ,அது ஏற்கனவே  அருந்திய  பாலை  வாந்தி 
எடுத்துவிடும் . 
        
குழந்தை  வளரும்போது  ,அதன்  உடல்  வளர்ச்சிக்கான  உணவு  பொருட்களை  தானே  சாப்பிட்டுக்கொள்ளும் . என்னவோ  குழந்தையின்  உடலை தாங்கள்தான்  வளர்ப்பதாக  பெற்றோர்கள்  பாவித்துக்கொண்டு  ,உணவு  ஊட்டுவதையே  குறிக்கோளாகச்  செய்கின்றனர் .
        
குழந்தையின்  வயிறு  மிகவும்  மென்மையானது .உணவு  ஜீரணிக்க குழந்தையின்  வயிற்றுக்கு  இடம்  அளிக்கவேண்டும் . இரைப்பை  முழுக்க  உணவு  பண்டங்களை  திணித்து  விட்டால்  அது  எப்படி செரிமானமாகும்?
kulanthaiyen vayeru க்கான பட முடிவு

குழந்தை  பசியெடுக்கும்  போது தானே   அழும் . உணவு  கொடுத்தால்  அழுகையை  நிறுத்திவிடும் . போதும்  என்று நினைத்தால்  உணவை  மறுத்துவிடும் .தொடர்ந்து   ஊட்டினால்  மீண்டும்  அழ ஆரம்பித்துவிடும் . 
இயற்கைதான்   குழந்தையை  அழ  வைக்கிறது .
 
ஆனால்  அது நம் தாய்மார்களுக்கு  புரிவதில்லை  .குழந்தையை  வெளியே  தூக்கி  சென்று  ,விளையாட்டு  காட்டிக்கொண்டே  உணவை  
திணிக்கிறார்கள் .குழந்தைகளை பயமுறுத்தி  ஊட்டும்போது  நரம்பு மண்டலம்  பாதிக்கப்படுவதால் , வாந்தி  ஏற்படுகிறது .

ஆனால் , தாய்க்கு  கோபம்  பொத்துக்கொண்டு  வருகிறது .  குழந்தையின்  தலையில்  தலையில்   குட்டுக்  குட்டியும் , முதுகில்  அடித்தும்  ,கன்னத்தை  கிள்ளியும் ,காதை  திருகியும் ,உணவை  திணிக்கிறாள் .
                      தொடர்புடைய படம்
இதுபோன்ற  வன்செயல்கள் , அக்கறை  நிமிர்த்தமானது  எனலாம் . ஆனால் குழந்தையின்  உடல் -மன  ஆரோக்கியத்தை  கெடுத்துவிடும் . எத்தனை தாய்மார்களுக்கு  இந்த  உண்மை  தெரியும்.

உங்கள்  குழந்தைகளுக்கு  உணவு  புகட்டுவதில்  நீங்கள்  சரியாக  இருந்தால்  ,அதைவிட  சிறந்த  வளர்ப்பு  முறை  ஏதுமில்லை . அப்போதுதான் ,தாய்க்கும் குழந்தைக்குமான  உறவு   ஆரோக்கியமாக  இருக்கும் .

எனவே, அளவான , இயல்பான ,இயற்கையான  நல்ல  உணவுகளை குழந்தைகளுக்கு  கொடுங்கள் .