Friday, April 5, 2019

அனைத்திற்கும் ஒரே மருந்தா ? இது எப்படி சாத்தியம் .......


  •  இன்றைய  தலைமுறைகள்  எதிர்கொள்ளும்  முக்கிய  பிரச்சனைகள் உடல் சோர்வு  ,கண் பார்வை குறைவு  ,ரத்த அழுத்தம்  ,சர்க்கரை  உடல் பருமன்   போன்றவையாகும்  .கடந்த  50  வருடகால வாழ்க்கைமுறை  மாற்றத்தின்  பலன்களை  இன்று  நம் அனுபவிக்கிறோம் .  இதற்கு  முக்கிய  காரணம்  வாழ்க்கைமுறையுடன்  கூடிய  உணவு பழக்கங்கள் .

     

  • அன்று  விவசாயம்  சார்ந்து  இயங்கிய  நாம்  இயல்பாகவே  நல்ல உணவு  பழக்கங்களை  கொண்டிருந்தோம்  .அது  மெல்ல  மெல்ல நகரமயமாதிற்கு  சென்று  காலை  9 முதல்  மாலை 6  வரையிலான வேலை /வாழ்க்கைமுறை , பொருளாதாரத்தை  மையப்படுத்திய வாழ்கை  என்று  மாறத்தொடங்கிய  நாள்   முதல்  அதற்கு ஏற்றாற்போல்  நமது  உணவுபழக்கமும்  மாறிவிட்டது .

     

    இன்றைய  வாழ்க்கை  சூழல்  இப்படிதான்  என்பது  நிதர்சனம் .ஆனால் நாம் நலமுடன்  வாழவேண்டும்   என்பதும்  அவசியம்

     

  •  உதாரணமாக  , காலை  பழைய  கஞ்சி  குடித்து   விட்டு  மண்ணில் வேலை  செய்த  மக்கள்    இன்று  முதுமையிலும்  நலமுடன் வாழ்கின்றனர் . ஆனால்  ,இன்று மேற்கித்திய  உணவு  முறை ஆதிக்கம்  மற்றும்  தினமும்  ஒரே  வகையான, பொங்கல்   உணவுகள் போன்றவை  நமது  ஆரோக்கியத்தை  கொஞ்சம்  ஆட்டிப்பார்க்கிறது என்றே  சொல்லலாம் .


Related image
  • இவை  அனைத்தையும்  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள  ஒரு எளிய  வழி  இருகிறது . அந்த  மந்திர சொல்தான்    "முருங்கை " .நமது  உணவில்  தினமும்  முருங்கை கீரை , காய்  ,பூ  எதாவது  ஒன்று  சேர்த்துக்கொள்ள வேண்டும் .

     

  • இதிலும்  சமைத்த  முருங்கைகாயை  கீரை  விட  மிக  நல்லது .அதையும் விட  முருங்கை  பூவில்  எடுக்கப்படும்  தேன்   நல்லது  .இது தற்போது  சந்தைகளிலும்  கிடைக்கிறது.

                         Image result for murungai poo theen

  • நமது  இயல்பான  வாழ்கை முறையிலும்  உணவுப்பழக்கம் எவ்வாறாக  இருந்தாலும்  தினமும்   ஒரு கரண்டி  இந்த  முருங்கை  பூ தேன்  எடுத்துக்கொண்டால்  ஆரோக்கிய  சீர்கேட்டிலிருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் . காலையில்  எழுந்ததும்  வெறும் வயிற்றில்  எடுத்துகொள்வது  மிகவும்  நல்ல  பலனை  தரும் .

     

 இவ்வாறு  இந்த  மகத்துவம்  வாய்ந்த  முருங்கை பூ தேன்  உட்கொண்டால்  எவ்வித   நோய்  நொடியும்  இன்றி  நலமுடன்     வாழலாம்  என்பதில் ஐயமில்லை .

No comments:

Post a Comment