தலைவலி ,இருமல் :
நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நோய்களில் நமக்கு மிகவும்
அதிகம் வலிகளை தரக்கூடியவைகளில் ஒன்று தலைவலி இருமலும் ஆகும் .இதனை மிகச் சிறந்த இயற்கை வைத்தியத்தின் மூலமாக நாமே நாம் வீட்டிலே இருந்தபடியே சரிசெய்துகொள்ளளாம். எப்படி என்பதையும் அவை செய்யக்கூடிய வழிமுறைகளையும் இங்கே காணலாம் .

- அ ) நாட்டு வெங்காயம் இரண்டு மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டாலும் ,
- ஆ ) கொண்டைக்கடலையை லேசாக வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர தலைவலி , தலைபாரம் ,இருமல் தீரும்
- துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும் .
- துளசி இலை ,வில்வ இலைச்சாறு வகைக்கு 100 மி லி எடுத்து ,அத்துடன் 200 மி லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி ,சாறுசுண்டியபின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும் .
- ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்து போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி ,இதனை இரவில் தூங்க போவதுற்கு முன்பு 3 நாட்கள் தொடர்ந்து குடித்துவர இருமல் ,தலைவலி உடனே போய்விடும் .
- மிளகாய் ஊசியால் குத்தி தீயில் அதன் புகையை மூக்கு மூலமாக உள் இழுத்தாலே ஜலதோஷம்,தலைவலி போய்விடும் .
- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல் குணமாகும்
- நொச்சி இலையை தலையணைக்குள் பரப்பி வைத்து தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி ,சளி பிரச்சனையும் விலகிவிடும் .
- திப்பிலி ஒரு பங்கு &துளசி இலை 3பங்கு என்ற அளவில் பொடிசெய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும் .
- சூடான சுக்கு ,மல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும் .
- நெஞ்சுச்சளி தீர தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவலாம் .
- இஞ்சிசாறு 50 கி ,நல்லெண்ணெய் 50கி சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ளவும் .இந்த தைலத்தை தேய்த்து 20 நிமிடம் ஊறியதும் பயத்தமாவு &அரப்புத்தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைவலி குணமாகும்.
- முள்ளங்கி சாறு அல்லது மாதுளம் பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும் .
- வெந்தய கீரையை சமைத்து சாப்பிட இருமல் குணமாகும்
- சித்தரத்தை ,சுக்கு ,மிளகு ,சதகுப்பை ,திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடிசெய்து கால் லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து மூன்று பங்காக்கி ஒரு நாளைக்கு 3 வேளை அருந்தினால் நோய்கள் தீரும் .

- துளசி ரசம் ,இஞ்சி ரசம் ,கலந்து பருகலாம் .
- நத்தை சூரி இலை சாறை 15 மி .லி காலை மாலை சாப்பிடலாம் .
- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம் .
- முசுமுசுக்கை இலையை சாறு எடுத்து தோசை மாவுடன் கலந்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டால் சளி சுரம் தீரும் .
- ஆடாதோடை இலையை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும் .
No comments:
Post a Comment