Friday, April 5, 2019

வீட்டில் எந்தெந்த தெய்வ படங்களை வைத்து வணங்கலாம் ?



   பொதுவாக   கடவுள்   வழிபாட்டில்   உருவ   வழிபாடு   மிகவும்  முக்கியமானதாகும் .  உருவ  வழிபாடே  மக்களின்   மனதை    கடவுளிடம்  ஒன்றுமாறு   செய்யக்கூடியது   .  உருவ   வழிபாட்டால்  மக்கள்  கடவுளை  நேரில்  கண்டு  பிராத்தனை   செய்வது  போல்  மனம்   மகிழ்கிறார்கள் .


    Related image


பூஜையறையில் வைக்கவேண்டிய படங்கள் :

 

🙏  பொதுவாக   வீட்டில்  அவரவர்   குலதெய்வத்தின்   படங்களை   வைத்து  வணங்கி  வரலாம் .  இது   மிகவும்   நன்மையை   தரும்  

Related image

🙏அவரவர்   இஷ்ட தெய்வத்தின்   படங்களை   வைத்து  வணங்கி  வரலாம் . குலதெய்வத்திற்கு   அடுத்தபடியாக  நமக்கு   அருள்பாலிக்கும்  தெய்வம்  இஷ்ட  தெய்வமாகும் .

    Image result for vinayagar

🙏எந்த  ஒரு   விநாயகர்  படத்தினையும்   வீட்டில்  வைத்து  வணங்கி  வரலாம் .இவரை  வழிபடுவதனால்  நம்  வாழ்வில்  அணைத்து  நலன்களையும் பெறலாம் .

 
Related image 

 

🙏குழந்தை  கடவுள்  படம்  எதுவாக  இருந்தாலும்  அதை  வைத்து   வரலாம் . அது  குழந்தை  பாக்கியத்தை  தரும் .

 

 

Related image

 

🙏அன்னப்பூரணியின்   படத்தை  வீட்டில்  வைத்து வழிபாடு  செய்வது  மிகவும்  சிறப்பானது  . இதன்  மூலம்  வறுமை  நீங்கும் .பசி   பட்டினி   தீரும் .  வேலையில்லாமல்   இருப்பவர்களுக்கு  வேலை கண்டிப்பாக  கிடைக்கும் .

 Related image

 

🙏அர்தநாரீஸ்வரரின்   படத்தை  வைத்து  வணங்கி  வரலாம் .நம் அனைவர்க்கும்   வணங்க  வேண்டிய கடவுள்  இவரே .சக்தியுடன்  இருக்கும்   சிவபெருமானின்  படத்தை   வணங்கி  வரலாம் .

 

 Related image

 

🙏குடும்பத்துடன் இருக்கும்  சிவபெருமானுடைய  படத்தை  வைத்து  வணங்கி  வரலாம்  .இதுவே   எல்ல வடிவங்களையும்  காட்டிலும் மிகவும்  சிறந்தது .

 Related image

 

🙏கலைமகளின்  படத்தை  வைத்து   வணங்கலாம் .இதனால்  சிறியவர்களுக்கு  மட்டுமல்லாது  பெரியவர்களுக்கும்  பேச்சுதிறமையும்,  எழுத்துத்திறமையும்   உண்டாகும் .

 

 Related image

 

🙏ராமர் , சீதை  ,  லட்சுமணன்  இவர்களுடன்  கூடிய  அனுமனின்  படத்தை  வைப்பது  சிறந்ததாகும் .   அனுமனின்  படத்தை   வைத்தால்  அதனுடன்   ராமனின்   படத்தையும் கட்டாயம்  வைத்து   வணங்க  வேண்டும் .


Related image

 

🙏லட்சுமி  நாராயணனின்  எந்த  அலங்காரத்தையும்  வைத்து வணங்கலாம் .

Related image

 

🙏ராஜ  அலங்கார  முருகனின்   படத்தை  வைத்து வணங்கலாம் . முன்னேற  துடிப்பவர்கள்  வணங்க  வேண்டிய கடவுள் இவரே .

Related image

 

🙏மணக்கோலத்தில் இருக்கும் முருகன் படத்தினை வைத்து வணங்கி வரலாம். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை ,அன்பு ,காதல் ,பாசம் உண்டாகும் .


No comments:

Post a Comment