Friday, April 5, 2019

அம்மாடியோ !!!! இவளோ பெரிய காடா ?போகமுடியுமா ? போகணும்னுதா ஆசை ....

               

 

 

 

          அற்புதங்களும் ,ஆச்சரியங்களும்

                       😱 நிறைந்த அமேசான் காடு 😱 


     Related image

                                    அமேசான் எனும் அற்புதம் .....!!!

                       வருடமெல்லாம்  கொட்டும் மழை .....!!!

             சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் தரை .....!!!

           கண்ணுக்கெட்டிய  தூரம்வரை மரங்களும் ,செடிகளும் 

                                                பின்னிப்பிணைந்த அடர்ந்த காடு.....!!!

         இதுவரை கண்டிராத எண்ணற்ற அபூர்வமான                   

                                                      பறவைகளும் ,விலங்குகளும் .....!!!

          இதுவரை வெளி உலகமே பார்த்திராத சில   

                                                               ஆயிரம் பழங்குடியினர்.....!!!

              இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமேசான்  

 காட்டை  உருவாக்கிய பெருமை அமேசான் நதிகே சேரும் ....!!!

 

 

                                  வாருங்கள்.........

               அமேசான் காட்டிற்கு போகலாம்......


🌄 அமேசான் காடு என்பது தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஒரு மழைக்காடு ஆகும் .


🌄இதன் பரப்பளவு 7 மில்லியன் சதுர கிலோமீட்டராக்ள் ஆகும் . இதில் காடு  மட்டும் 5.5 மில்லியன்  ச .கி .மீ ஆகும் .மேலும் இது 9 நாடுகளில் பரவி உள்ளது .


🌄அந்நாடுகள்: கொலம்பியா,பெரு,வெனிசுலா,ஈக்வெடார்,கயானா,பொலிவியா,சுரிநாம் , பிரெஞ்சு ,கயானா ,ஆகியனவாகும் .


🌄அமேசான் காடுகளில் ஜீவாதாரமாக விளங்கும் அமேசான் நதி உலகின் மிக பெரிய நதியாகும் .

 

🌄அமேசானில் கிடைக்கும் 3000 பழவகைகளில் 200 மட்டுமே நம் பயன்பாட்டிற்கு வருகிறது .ஆனால் ,இங்கே வாழும் மக்கள் சுமார் 2000 அரிய பழ வகைகளை உண்ணும் பெயர் பெற்றவர்கள் .

 Related image

🌄உலகின் மிகப்பெரிய பாம்பினமான அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் நதிக்கரையில் வெகுசாரதாரணமாக காணப்படுகினறன 

 

🌄இன்றும் அமேசான் காடுகளிலும் ,நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிக்க முடியாத  மர்மங்கள் நிறையவே உள்ளன .

 

🌄அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது .இது ஆற்றில் விழுபவர்களுக்கு தீயில் விழுவது போன்று உணர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர் .

 

🌄மனித இனம் காணாத பல அதிசயங்கள் இங்கு ஒளிந்து இருக்கின்றன 

 Related image

🌄அமேசான் காடுகளுக்குள் சென்றுவிட்டு எளிதில் மீண்டு வர முடியாது .இதற்கு காரணம் அங்கு வாழும் விலங்குகளும் ,இயற்கை அமைப்புகளும் ,தண்ணீரின் ஓட்டமும் , இருட்டான சூழ்நிலையும்தான் .

 

🌄ஆச்சர்யமும் ,அமானுஸ்யமும் சூழ்ந்த இந்த அமேசான் காட்டிற்கு சென்று   வருவதை கற்பனை செய்தலே ஜில்லிட்டுப் போகிறது  .........

.

1 comment: