கோடையில் எத்தனை பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கு!!!!
கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் ....!
👉 கோடைகாலம் வந்துவிட்டது வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம் .கோடை வெயிலால் நம் சருமம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கூந்தலும் பாதிக்கப்படும் .கோடையில் சருமத்தையும் , கூந்தலையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி பார்ப்போம் .
👉அவகோடா , வாழைப்பழம் இரண்டையும் சம அளவு எடுத்து குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கூந்தல் பட்டு போல மிருதுவாக இருக்கும் . கூந்தலின் உறுதித்தன்மையும் அதிகரிக்கும் .
👉வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலையில் ஏற்படும் சிறுகட்டிகள் மறையும் .
👉சிலருக்கு கண், மூக்கு , உதடு பகுதிகளைச் சுற்றி கருவளையம் இருக்கும் .புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமம் பெறலாம்.
👉தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புசத்து இருப்பதால் சருமத்திற்கு நீர்சத்து கிடைக்கவும் , நிறம் கருமையாவதையும் தேடும்.
👉ஆண்கள் , கற்றாழை சாட்டுரைதான் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து முகத்தில் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை தரும்.
👉தயிர் உடலுக்கு மட்டுமின்றி சருமாதிரிக்கும் நல்லது . தயிரை அப்படியே பயன்படுத்துவது பதிலாக , தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம்.
👉ஆரஞ்சு பலத்தினை தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம் .
👉சிறிய பஞ்சில் ஆலிவ் ஆயில் வைத்து கண்களை சுற்றி தேய்த்துவந்தால் கண்ணில் உள்ள கருவளையம் நீங்கும்.மேலும் கண்களுக்கு புத்துணர்வு அளிக்கும்.
👉சந்தனத்தை உடலில் தேய்த்துக்கு கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம்.
👉கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான் . வெள்ளரி, தர்பூசணி, இளநீர் , போன்றவற்றை அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது .குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் சருமம் மங்காமல் , செழுமை அடையும்.
👉வெயிலில் அலைபவர்கள் , வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீர் குடிக்கவேண்டும் . இதனால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
இதையெல்லாம் எடுத்துக்கொண்டால் கோடையில் உடல்வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும் .
No comments:
Post a Comment