Tuesday, April 16, 2019

இங்கு ஒரு மணி நேரம் இருந்தால் நிச்சயம் மரணம்......ஏன் ?....எப்படி?

                                     கராசே  ஏரி 

 

  • இயற்கை  நமக்கு   ஏராளமான  நன்மைகளை  செய்தாலும், மனிதர்களான  நாம்  இயற்கைக்கு  ஏதேனும்  தீங்கு விளைவிக்கக்கூடிய  ஒரு  காரியம்  செய்தால்  அது  இரண்டு   மடங்காக  தீங்கு   விளைவிக்கக்கூடியதாக   மாறிவிடும் .

 

  • ஆனால் ,  மனிதர்களால்  பாதிப்பு  ஏற்பட்டு  சுத்தமாக  உள்ள  ஏரி  விஷமாக  மாறிவருகிறது . அதாவது , தேவைல்லாத  பல  பொருட்களை  நீர் ஆதாரமாக  உள்ள  இடங்களில் கொட்டுவதால்  அந்த  இடம்  பாதிப்புக்குள்ளாகிறது.


 

  • அந்தவகையில்  சுத்தமான   ஏரியில்  கழிவுகளை கொட்டியதாலும் , மனிதன்  தன்   தேவைக்காக செய்த  செயல்களாலும்  கதிரியக்கம்  கொண்டதாக  மாறிய  ஒரு ஏரியை  பற்றி  தான் இன்று அறியப்போகிறோம் .


  • மத்திய  ரஷ்யாவின்  தெற்கு  யூரல்  மலையில் அமைந்துள்ளது.      

                                                                                                                        

  • 1951-ம் ஆண்டு  முதல்  சோவியத்  ஒன்றியதால்  அணுசக்தி கழிவுகளை   கொட்டும் இடமாக  இந்த  ஏரி  பயன்படுத்தப்பட்டது .


  • 1957-ல் கராசே  ஏரியின்  அருகில்  அமைந்திருந்த  அணுசக்தி ஆலையில்  வெடிவிபத்து  ஏற்பட்டது .


  • அந்த  வெடி  விபத்து  காரணமாக  ஏராளமான  கதிரியக்க  துகள்கள்  ஏரியில்  பரவியது.

 

  • இதனால்  இந்த  ஏறியில்  உள்ள  நீர் மிகவும்  கதிரியக்கம்   கொண்டதாக மாறியது .

 

  • மேலும்,  இதன்  அருகில்  ஒருமணி  நேரம்  நின்றாலே  உயிரை  பறிக்கும்  அளவிற்கு  விஷத்தன்மை  வாய்ந்ததாக  உள்ளது .

No comments:

Post a Comment