Sunday, April 21, 2019

கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா .... வேண்டாமா ????


கோடைகாலத்தில்  நாம் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் .இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.அந்த வகையில் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது .

ஓரு பொதுவான அறிவுரை என்னவென்றால கோடையில் முட்டைகளைத் தவிர்ப்பது. முட்டைகள் மிகவும் உஷ்ணமானவை மற்றும் நல்லதை விட அதிக தீமையை விளைவிக்கலாம் என்று நம்பப் படுகிறது. முட்டைகள் பல ஆரோக்கிய பலன்கள் கொண்டவை மற்றும் அவை புரோட்டின், வைட்டமின் ஏ, டி மற்றும் பிற ஊட்டச்சத்துகளுக்கு சிறந்த ஆதாரமானவை. என்வே, அவை உண்மையிலேயே கோடையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா ?அதை பற்றி இங்கு காண்போம்.

🥚 முட்டையில் கனிமசத்து , வைட்டமின் , கால்சியம் , இரும்புசத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.


🥚கோடைகாலத்தில் சத்துக்கள் நிறைந்த முட்டையை சாப்பிட்டால் , செரிமான பிரச்சனை ஏற்படும் என்ற பரவலான கருத்துக்கள் உள்ளன.ஆனால் அது சரியான கருத்து இல்லை என்று சமையல் வல்லுநர்கள் கூறுகின்றனர் .

🥚கோடைகாலத்தில்  முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தை குறைக்கலாம் .முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டசத்துக்கள் , கோடையில் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.


 🥚கோடையில் அளவுக்கும் அதிகமாக முட்டை உட்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு அசவுகரியங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

🥚முட்டை  கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உடல் சோர்வு மாற்றும் உடல் பலவீனம் ஆகியவற்றை தடுக்கிறது .ஏனெனில் முட்டைஉடலில்  உள்ள ஆற்றலை நீண்ட நேரம் தக்கவைத்து கொள்ளகிறது .

🥚முட்டையை குறைவான எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் .ஏனெனில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல .

🥚முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

🥚பொதுவாகவே, கோடை கடக்கும் வரை அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லதாகும் .

🥚முட்டை அதிகமாக சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பெரியவர்கள் வெயில்காலத்தில் முட்டை சாப்பிட்டால், அவர்கள் தங்களுடைய உடலை சமாளித்துக் கொள்ள முடியும். குழந்தைகள் சாப்பிடும்போது உடல் நலக்கோளாறுகள் உண்டாகும். அவற்றை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான், தாய்மார்கள் குழந்தைகளுக்கு வெயில்காலத்தில் முட்டை கொடுக்க தயங்குகிறார்கள்.


No comments:

Post a Comment